சத்து நிறைந்த அவகோடா துவையல் செய்யவது எப்படி?! - Seithipunal
Seithipunal


வகோடாவில் மக்னீசியம், பொட்டாசியம், நல்ல கொழுப்புக்கள், வைட்டமின் பி6, வைட்டமின் சி, வைட்டமின் கே1, மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் அடங்கியுள்ளது. 

தேவையான பொருட்கள்:

அவகோடா பழக்கூழ் - 1 கப்
பூண்டு - 5 பல்
புளி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
உளுந்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 8
கடுகு - அரை டீஸ்பூன்
பெருங்காயம் - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்


செய்முறை:

முதலில் அவகோடாவில் உள்ள தோல், கொட்டை நீக்கி வைத்து கொள்ள வேண்டும்.

கடாயை அடுப்பில் வைத்து 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பூண்டு சேர்த்து சிறிது நேரம் வறுத்து ஆறியதும், அதனுடன் புளி சேர்த்துப் பாதி அரைபட்டதும் அவகோடா பழக்கூழைச் சேர்த்து அரைத்துக்கொள்ள வேண்டும். 

மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து அரை டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, பெருங்காயம் ஆகிய பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்க்க வேண்டும்.

பின்பு சத்தான சுவையான அவகோடா துவையல் தயாராகிவிடும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare avocado thuvaiyal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->