குழந்தைகள் நாணயத்தை உட்கொண்டுவிட்டனர் என்பதை நாம் அறிந்துகொள்வது எப்படி?.!! - Seithipunal
Seithipunal


நமது இல்லங்களில் தவழ்ந்து விளையாடும் குழந்தைகள் யாரேனும் இருப்பின் அவர்கள் சில நேரத்தில் பெற்றோர்கள் அல்லது குடும்ப உறவினர்கள் வைத்துள்ள நாணயங்களை சில நேரங்களில் தெரியாமல் சாப்பிட்டு விடுவது வழக்கம். 

இந்த செயலை நாம் சிறு குழந்தையாக இருந்த போதும் செய்திருக்கலாம்., நமது பெற்றோர் அல்லது உறவினரை கேட்டால் தெரியும்., ஒரு நாணயத்தை சாப்பிட்டுவிட்டு நாம் செய்த அலப்பறை என்ன வென்று., அந்த வகையில் சிறு குழந்தைகள் நாணயத்தை சாப்பிட்டால் தொண்டையில் சிக்கும் அபாயமும்., சில நேரத்தில் மலம் கழிக்கும் சமயத்தில் வெளிவரும் நிகழ்வுகளும் நடைபெறும். 

நமக்கே தெரியாமல் குழந்தைகள் நாணயத்தை சாப்பிட்டிருந்தால் அவர்களின் உடலில் ஏற்படும் அறிகுறிகளை வைத்து நாம் அதனை கண்டறிய இயலும். குழந்தைகள் தொடர்ச்சியாக எச்சில் வடிதல்., உணவு வழங்கும் சமயத்தில் விழுங்க கஷ்டப்படுத்தல் அல்லது உணவு வழங்கும் நேரம் ஆகியும் உணவை வழங்கினால் மறுத்தால்.,  வாந்தி., குமட்டல் மற்றும் கழுத்து வலி., திடீர் காய்ச்சல்., இரத்தத்துடன் மலம் வெளியேறுவது., வயிற்று வலி., தொடர் இருமல் போன்றவை மூலம் அறிந்து கொள்ளலாம். 

இந்த அறிகுறிகளை சிலர் சாதாரணமாக என்னும் பட்சத்தில் சில விபரீத முடிவுகள் ஏற்படலாம்., இந்த நேரத்தில் எந்த விதமான சலனமும் அடையாமல் மருத்துவர்களிடம் அழைத்து சென்று சோதனை செய்து சிகிச்சை பெறுவது நல்லது. இன்றளவிலும் சிறு குழந்தைகள் ஏதேனும் காசுகளை உட்கொண்டால் தொக்கம் எடுக்கும் நபர்களிடம் சென்று தொக்கம் எடுப்பது வழக்கம். 

தொக்கம் எடுப்பதன் மூலமாக குழந்தைகளின் உடலில் அல்லது உணவு குடலில் இருக்கும் தேவையற்ற பொருட்கள் வெளிவரும்., இந்த பிரச்சனைக்கு நகரங்களில் இருப்போர் பெரும்பாலும் மருத்துவரை அணுகுவது வழக்கம். ஏனெனில்., நகர்புறங்களில் தொக்கம் எடுக்கும் நபர்களின் எண்ணிக்கை அரிதே., குழந்தை ஏதேனும் பொருட்களை உட்கொண்டால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவரிடம் அழைத்து செல்வது நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to know when eat coins by babies


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->