பண்டிகை தினத்தில் சலிக்க சலிக்க உணவு உண்டு செரிமானக்கோளாறால் அவதிபடுகிறீர்களா?! இதனை படியுங்கள்!! - Seithipunal
Seithipunal


"அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" "ஆசைப்படுவதில் தவறொன்றும் இல்லை., ஆனால் பேராசைதான் படக்கூடாது".. 

வாரத்தின் ஆறு நாட்களிலும் ஓடி ஓடி உழைத்து வாரத்தின் இறுதி நாளன்று எதாவது நல்ல உணவு விடுதிகளுக்கு அல்லது விருப்பமான இடத்திற்கு சென்று விருப்பமான உணவுகளை உண்ண வேண்டும் என்பது அனைவருக்கும் இருக்கும் விருப்பத்தில் ஒன்றே.

அந்த வகையில்., அவரவர் விருப்பத்திற்கேற்ப கடைகளுக்கு அல்லது நட்சத்திர விடுதிகளுக்கு சென்று பிடித்த உணவுகளை குடும்பத்துடன் அல்லது நண்பர்களுடன் சென்று சாப்பிடுவது வழக்கம். அந்த வகையில் ஏற்படும் அஜீரண கோளாறுகளும்., சில வயிறு சம்பந்தமான உபாதைகளும் ஏற்படக்கூடிய காரணத்தை காண்போம். 

எண்ணையில் தயார் செய்யப்பட்ட பொருட்களை உண்ணுவதற்கு முன்னர் அதனை நல்ல சுத்தமான புதிய எண்ணையில் செய்யப்பட்டுள்ளதை உறுதி செய்யுங்கள்., பழைய அல்லது நாள் தீர்ந்துபோன எண்ணையாக இருப்பின் அது சம்மானந்தமான உணவுகளை உண்ணுவதை தவித்துவிடுங்கள். 

குளிர்சாதன பெட்டி இல்லத்தில் இருப்பதன் காரணமாக அதிகளவு உணவுகளை தயாரித்து வைத்து பொறுமையாக சாப்பிட்டுவிடலாம் என்று எண்ணிவிட வேண்டாம்., அளவாக தேவையான உணவை சமைத்து சாப்பிடவேண்டும். 

அதிகளவு புரதசத்து கொண்ட உணவு பொருட்கள் எளிதில் கெட்டுப்போகும் தன்மையுடைய பொருட்கள் என்பதால் அதனை சமைத்து குறிப்பிட்ட நேரத்திற்குள் சாப்பிட்டுவிட வேண்டும். 

எந்த ஒரு பொருட்களையும் கடைகளுக்கு சென்று வாங்கும் போதே அதன் இறுதி தேதியை கவனித்து வாங்கிவிட்டு அதனை சாப்பிடுங்கள்., குழந்தைகளுக்கு முடிந்தளவு வீட்டில் நொறுக்குத் தீனிகளை தயார் செய்து வழங்குங்கள். 

மழைக்காலம் மற்றும் பனிக்காலங்களில் உணவு பொருட்களை எளிதாக பூஞ்சைகள் தாக்குவதால் அரிசி மற்றும் பருப்பு மூலமாக தயார் செய்யப்பட்ட உணவுப்பொருட்கள் எளிதில் கெட்டுப்போய் விடும். இதன் காரணமாக மழை மற்றும் பனி காலங்களில் தேவையான அளவிற்கு உணவுகளை தயார் செய்யுங்கள்.  

நமது இல்லங்களில் இருக்கும் சமையல் பொருட்களில் ஈரப்பதம் தவாமல் பார்த்துக்கொள்ளுங்கள்., எதிர்பார்த்த சூழ்நிலைகளில் சில பொருட்களில் ஈர்ப்பதமானது படர்ந்து அதன் மூலமாக அந்த பொருட்களை வெயில் காயவைத்து உபயோகம் செய்யுங்கள்., அவ்வாறு செய்தாலும் அந்த பொருட்கள் மீண்டும் கெட்டுப்போக வாய்ப்புள்ளது. 

ஒரு நாள் தான் என்று அளவுக்கு அதிகமான உணவுகளை சாப்பிட்டுவிட்டு இருக்கும் இடத்தில இருந்து எழுந்திருக்க முடியாமல் தவிர்ப்பது நல்லதல்ல. அந்த ஒரு நாள் நமது வாழ்க்கையின் இறுதி நாளாக கூட இருக்கலாம். ஆகவே மேற்கூறிய கருத்துக்களை கடைபிடித்தாலே அதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளில் இருந்து எளிதில் விடுபட இயலும்....


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to avoid food poison tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->