90 கிட்ஸ் தின்றுதீர்த்த கோபால் பல்பொடி.! இன்றுள்ள குழந்தைகளுக்கு வழங்க வேண்டிய பற்பசையின் அளவு தெரியுமா?.!! - Seithipunal
Seithipunal


இன்று உள்ள பெரும்பாலான குழந்தைகள் பல் துலக்குவதாக கூறி பற்பசைகளை உண்டு வீட்டில் பெற்றோர்களிடம் அடி வாங்கியதே இல்லை என்று தான் கூறவேண்டும். அன்றுள்ள காலத்தில் இருந்த கோபால் பல்பொடி மற்றும் பயோரியா பல்பொடிகளை உபயோகம் செய்திருந்தோம். பயோரியா பல்பொடிக்கு குட் பய் சொல்லிவிட்டு., கோபால் பல்பொடியை வாங்கி பாக்கெட் பாக்கெட்டாக தின்ற பெருமை 90 கிட்ஸை சாரும். 

நாம் சிறுவயதில் குழந்தையாக இருக்கும் சமயத்தில் நமது தாயார் பல் தேய்த்து விடுவார். இதனால் சொகுசு கண்டு ஐந்து வயது வரை சில குழந்தைகள் பல் துலக்காமல் இருந்து வருவார்கள். சில பெற்றோர்களின் கண்டிப்பால் பல் துலக்க குழந்தைகள் தயாராக தொடங்கிவிடும். 

பல பெற்றோர்கள் அவர்களின் குழந்தைகளுக்கு பற்பசைகளை அதிகளவில் வைத்து பல் துலக்க கூறி சொல்கின்றனர். மேலும்., அதிகளவில் பற்பசைகளை உபயோகம் செய்து பல் துலக்கி விடுகின்றனர். 

மூன்று வயது முதல் ஆறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பட்டாணி அளவிலான பற்பசைதான் பல் துலக்கும் நேரத்தில் வழங்க வேண்டும். இதுவே குழந்தைகளுக்கு தேவையான மற்றும் ஆரோக்கியமான முறையாகும். 

பல் துலக்கும் பிரசானது மிகுந்த மென்மையாக இருக்க வேண்டும்., பற்களை துலக்கும் நேரத்தில் இரண்டு நிமிடமாவது பல் துலக்கியிருக்க வேண்டும். இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் குழந்தைகள் அதிகளவில் பற்பசைகளை உபயோகம் செய்தது தெரியவந்தது. குழந்தைகளுக்கு பட்டாணி அளவே பற்பசைகளை உபயோகம் செய்ய வேண்டும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how many quantity used when brushing for 3 to 6 years child


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->