ஹெட்செட்களை பயன்படுத்தும் நபர்கள் கவனத்திற்கு.! ஹெட்செட் உபயோகத்தில் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள காலத்தில் அலைபேசி எவ்வாறு நாம் தவிர்க்க முடியாத பொருளில் ஒன்றாக உள்ளதோ அதனை போன்று ஹெட் செட்டும் அவசியமான பொருளாக மாறிவிட்டது. இதனை அதிகளவு உபயோகம் செய்யும் பட்சத்தில்., காது கேளாமை மற்றும் உளவியல் ரீதியில் கொண்ட சில பிரச்சனைகளை நாம் அனுபவிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த ஹெட்செட்டிற்கு அம்மா வைத்த பெயர் செவிட்டு மிசின் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் தொடர்ந்து ஹெட்செட்களை அதிகளவு உபயோகபடுத்தும் பட்சத்தில் காதுகளில் இருக்கும் நரம்புகள் பாதிக்கப்பட்டு தலைவலி., தூக்கமின்மை மற்றும் ஒவ்வாமை பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாது காதில் இருந்து வெளியே வரும் மெழுகு போன்ற அழுக்குகள் வெளியேறாமல் நின்று விடுவதன் காரணமாக., நமக்கு காதுவலி மற்றும் இயற்கையான அழுகை வெளியேற்றும் திறன் பாதிக்கப்படுகிறது. 

இதன் காரணமாக காது கேளாமை பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்., அன்றைய காலத்தில் வயது அதிகமான பின்னர் காது தொடர்பான பிரச்சனைகள் இருந்து வந்த நிலையில்., இன்றுள்ள இளம் வயதுள்ள பெரும்பாலானோருக்கு இந்த பிரச்சனை இருந்து வருகிறது. அதிகளவு ஹெட்செட்களை உபயோகம் செய்தல் காதில் இருக்கும் நரம்புகளில் பாதிப்பு ஏற்பட்டு காது கேளாமை பிரச்சனை ஏற்படுகிறது. 

பொதுவாக காதுகளில் உள்ள நரம்புகள் பாதிக்கப்படும் பட்சத்தில் மூளையிலும் இதன் தாக்கமானது ஏற்பட்டு தூக்கமின்மை பிரச்சனை ஏற்படுகிறது. இயற்கையான ஒலி தாங்கும் அல்லது கேட்கும் அளவை விட அதிகளவு ஒலியை உபயோகம் செய்வதன் விளைவாக நமது செவி மாடலானது பாதிப்படைகிறது. எவ்வுளவு விலை உயர்ந்த ஹெட்செட்டுகள் வாங்கினாலும்., அதன் பாதிப்பு என்பது ஒன்றுதான்.  

தினமும் சுமார் 30 நிமிடங்களுக்கு மேலாக ஹெட்செட்களை உபயோகம் செய்வது விரைவில் காது தொடர்பான பிரச்சனையை ஏற்படுத்தும். அதிகபட்சமாக சுமார் ஒரு மணி நேரம் வேண்டும் என்றால் ஒரு நாளைக்கி உபயோகம் செய்யலாம். ஒரு முறை ஹெட்செட்களை பயன்படுத்திவிட்டு பின்னர் அதற்கான தகுந்த இடைவெளியை விட்டுவிட்டு பின்னர் ஹெட்செட்களை உபயோகம் செய்வது நல்லது. தவிர்க்க முடியாத சூழ்நிலையில் ஹெட்செட்களை உபயோகம் செய்வது நல்லது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

heavy usage of headphone to cause and affect this type of problems


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->