தலைமுடி கொட்டுவது ஏன்!! பராமரிப்பது எப்படி!! - Seithipunal
Seithipunal


தலையில் முடி சிறிதளவு தினமும் கொட்டுவது சாதாரணமான ஒன்றாகும். அதை எண்ணி பலர் கவலை படுவதும் இயற்கை தான். ஆனால் ஒரு சாதாரண மனிதன் 80-100 ரோமங்களை ஒரு நாளில் இழப்பது உண்மை தான்.

ஆனால் திடீரென தலைமுடி அதிகம் கொட்டுவதும் புதிதாக ரோமங்கள் முளைக்காமல் இருப்பதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

முடி கொட்டுவதும், மெலிவதும் எதனால் ஏற்படுகிறது? அதற்கு பல காரணங்கள் உள்ளது. முதலில் இதனை எண்ணி கவலைப்படாமல் இருக்க வேண்டும்.

தனது வாழ்நாளில் மூன்றில் ஒரு பெண் தலை முடி கொட்டும் பிரச்சினையை எதிர்கொள்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. பெரும்பாலும் இது தானாகவே சரியாகி விடும்.

பின்வரும் காரணிகளை அறிவோம்:

பரம்பரை ரீதியான காரணிகள்:

  • பெரும்பாலான நேரங்களில், சிலருக்கு பரம்பரை ரீதியாகவே தலைமுடி மெலிதாக காணப்படும்.  கொஞ்சம் கொஞ்சமாக தலை முடி மெலிதாகும் நிலை ஏற்படுகிறது.

எதிர்வினை காரணங்கள்:

  • வெளிப்புற காரணிகள் ஏதோ ஒன்றினால் தலை முடி உதிர்தல் மற்றும்/அல்லது மெலிதல் ஏற்படுகிறது. அதன் காரணம் மன அழுத்தம், மோசமான டயட், குறிப்பிட்ட நௌய், மாசு ஆகியவற்றில் ஏதோ ஒன்றாக தான் இருக்க வேண்டும்.

1. குறைபாடுகள்

  • புரதம், விட்டமின் B12 மற்றும் இரும்புச் சத்து குறைபாடு அதீத முடியுதிர்வை ஏற்படுத்தலாம்.
  • இதனை சரி செய்ய அதிக புரதம், கீரைகள், கேரட் மற்றும் சப்ளிமெண்டுகளை நீங்கள் உணவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குறிப்பிட்ட விட்டமின்களான B12 ஆகியவை அசைவ உணவுகளில் தான் காணப்படும். எனவே சைவ உணவுகளை மட்டும் உண்பவர்கள் சப்ளிமெண்டுகளை எடுத்துக் கொள்ளலாம்.

2. மனஅழுத்தம்

  • மன அழுத்தம் இருந்தால் கூட முடி உதிரும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். மன அழுத்தம் ஹார்மோன்களை நிலை தடுமாற செய்து தலை முடியை பாதிக்கும்.
  • இத தடுப்பதற்காக தியானம் செய்ய வேண்டும். மேலும் உங்களுக்கென சிறிது நேரத்தை செலவிடுங்கள் மற்றும் ஹெட் மசாஜ் எடுத்து கொள்வது நல்லது. 

3. டயட்டில் செய்யும் திடீர் மாற்றங்கள்

  • சரியான மற்றும் சரி விகித உணவுகளை எடுத்துக் கொள்ளாமல் இருப்பதாலும் முடி உத்தரவும், சருமமும் பாதிக்கும்.
  • அதற்காக சத்து மிகுந்த டயட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் போதிய நீர் சத்தினை கொண்டிருப்பதும் அவசியம்.

4. வயது

  • இந்த ஒரு காரணம் உங்களது தலை முடியின் அடர்த்தியை குறைய செய்யும் முக்கியமான ஒன்றாகும். இது இயற்கையான நடைமுறையாகும்.
  • இதனால் ஏற்படும் முடி உதிர்வை தடுக்க தரமான எண்ணெயில் ஆயில் மசாஜ்களை செய்வது உங்கள் கூந்தல் மீண்டும் வளர உதவும்.

5. அடிக்கடி ஸ்டைலிங் செய்வது

  • ப்ளோ ட்ரை, ஸ்ட்ரெயிட்டனிங், கலர் மற்றும் கர்ல் ஆகியவற்றை அடிக்கடி தொடர்ந்து செய்வதால் உங்களது கூந்தலின் அடர்த்தி குறையும். இதை தடுப்பதற்காக சிறிது நாட்களுக்கு பிறகு செய்து கொள்ள வேண்டும்.

மேலும் சூடான பொருட்கள் மற்றும் வாரத்துக்கு ஒரு முறை தைலங்களை பயன்படுத்துவது அவசியம். உங்களது தலைமுடி வகைக்கு ஏற்ப ஷாம்பூ மற்றும் கண்டீஷனர்களை பயன்படுத்த வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Healthy hair tips


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->