பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்தப்போக்கு மற்றும் பிற பிரச்சனைகள்., அவற்றுக்கான காரணங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இன்றுள்ள சூழ்நிலையில் இருபது வயதை தாண்டிய பெண்களுக்கு பெரும்பாலும் ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அதிக இரத்த போக்கின் காரணமாக ஏற்படும் பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகின்றனர். பெண்கள் அவர்களின் மாதவிடாய் காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாதவிடாய் சுழற்சியானது ஏற்படுகிறது. அந்த சமயத்தில் இரத்த போக்கின் தொடர்ச்சி குறித்து கவனிக்க வேண்டும். 

அவ்வாறு கவனிக்காமல் இருக்கும் பட்சத்தில் சில உடல் நலக்குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பொதுவாக 28 நாட்கள் முதல் 35 நாட்களுக்குள் மீண்டும் மாதவிடாய் சுழற்சியானது ஏற்பட்டு., மூன்று நாட்கள் முதல் ஏழு நாட்கள் வரை இரத்தப்போக்கு இருப்பது பிரச்சனையல்ல. மேலும்., பெண்களின் உடலின் ஆரோக்கியம் மற்றும் உடல் அமைப்பை பொறுத்து இரத்த போக்கின் சுழற்சி காலமானது மாறுபட்டு அமையும்.   

பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் நாளொன்றுக்கு ஆறு நாப்கின் வரை மாற்றம் செய்ய வேண்டிய சூழ்நிலையானது ஏற்படலாம். இந்த நேரத்தில் தாங்க முடியாத அளவிற்கு வயிற்று வலி., வெளியேறும் இரத்தமானது கட்டியாக வெளியேறுதல்., தொடர்ந்து ஏழு நாட்களுக்கு மேலாக இரத்த போக்கானது காணப்படுதல்., உடலில் பலவீனம் மற்றும் சோர்வு., மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமம் போன்றவை ஏற்படும்.  

சில வகை பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இரத்த போக்கானது ஏற்படும். இந்த வகையான பெண்களும் இதற்கு முன்னர் நடந்த மாதவிடாய் சுழற்சியில் அதிகளவு இரத்தத்தை இழந்தர்வர்கள். மாதவிடாய் சுழற்சி காலத்தில் அதிகளவு இரத்த வெளியேறுவது உடலில் உள்ள கெட்ட இரத்தம் வெளியேறுகிறது என்று நினைப்பது தவறான ஒன்று. அதிக இரத்த போக்கு இருக்கும் பட்சத்தில் மருத்துவரை அணுகுவது நல்லது. 

இந்த வயதில் உடலில் சுரக்கும் ஹார்மோனை அடிப்படையாக கொண்டு கர்ப்பப்பை செயல்பாடு., ஈஸ்டிரோஜன் மற்றும் புரோஜெஸ்டிரோன் ஆகிய பிரச்சனைகளுக்கு உதவுகிறது. இந்த ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்சனைகள் ஏற்படும் பட்சத்தில்., அதிக இரத்த போக்கு., உடற்பருமன்., நீர்க்கட்டி மற்றும் தைராய்டு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். 

கர்ப்பப்பை செயல்பாட்டில் ஏற்படும் சிக்கல்., கருமுட்டைகள் சரிவர வெளியேறாமல் இருப்பது., ஹார்மோன் சுரப்பதில் ஏற்படும் மாற்றங்கள்., கர்ப்பப்பையில் கட்டி போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இவையனைத்தும் இரத்த போக்கினை அதிகரித்து., இடுப்பு வலி மற்றும் சிறுநீர் கழிப்பது போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். இதன் காரணமாக புற்றுநோய்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இது போன்ற பிரச்சனைகள் இருப்பின் கட்டாயம் மருத்துவரை அணுகுவது நல்லது. 

மேலும்., சிலருக்கு ஊட்டச்சத்து குறைபாட்டின் காரணமாக கூட அதிக இரத்த போக்கு பிரச்சனையானது ஏற்ப்படும். இந்த பிரச்சனையானது சில நேரத்தில் இரத்த சோகை மற்றும் இரும்பு சத்தின் குறைபாடு போன்றவை ஏற்பட்டு., தோல் வெளிறுதல் மட்டும் சோர்வாக இருத்தல் போன்ற பிரச்சனைகள் அறிகுறிகளாய் தென்படலாம். இவை இருந்தாலும் கட்டாயம் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girls periods time attending problem heavy blood loss


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->