பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு உப்புசத்துடன் காணப்படுகிறதா!! இதை செய்யுங்கள்!! - Seithipunal
Seithipunal


பெண்கள் பிரசவத்திற்குப் பிறகு பெண்களின் வயிறு பெரிதாகக் காணப்படும். குழந்தை பெற்றால் அப்படித்தான் ஆகும் என்று அவர்களுக்கு அறிவுரை சொல்லாமல், சில உடற்பயிற்சிகளை செய்யச் சொன்னால் அந்த பிரச்சினையை எளிதில் போக்கிவிடலாம்.

இதற்காக என்ன செய்யவேண்டும்:-

  • மல்லாந்து படுத்துக் கொண்டு முதலில் வலது காலை மட்டும் மேலே தூக்க வேண்டும். அதன் பிறகு இடது காலை தூக்க வேண்டும். பிறகு இரண்டு கால்களையும் மேலே உயர்த்த வேண்டும். அதேபோல் தினமும் பத்து முறை செய்யவேண்டும். இப்படிச் செய்வதால் உப்பிக் காணப்படும் வயிற்றின் உப்புசம் குறையும்.
  • பின்பு நின்றுக் கொண்டு, இரண்டு கை விரல்களும், கால் விரல்களை தொடும் அளவுக்கு தினமும் பத்து முறை குனிய வேண்டும்.
  • காதைப் பிடித்துக்கொண்டு தோப்புக்கரணம் போடுவது போல் பத்து முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்க வேண்டும்.
  • நாற்காலியில் அமர்ந்து கொண்டு சமையல் வேலைகளை செய்யாமல், கீழே உட்கார்ந்து வேலை செய்வது நல்லது.
  • குழந்தை பிறந்த ஐந்து மாதத்திற்குப் பிறகு தினமும் நடைப்பயிற்சி செய்து வந்தாலும் வயிற்று உப்புசம் சரியாகும்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exercise after delivery


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->