சிறுநீருடன் இரத்தம் வெளியேறினால் நமக்கு இந்த நோய்கள் உள்ளது என்று அர்த்தமா?.! கவனமாக இருங்கள்.!!  - Seithipunal
Seithipunal


இன்றளவில் உள்ள காலக்கட்டத்தில் நாம் நமது உடலை சரியாக பராமரிக்க முடியாமல்., சரியான நேரத்தில் உணவுகளை சாப்பிட முடியாமல்., உடலுக்கு சத்தான உணவுகளை சாப்பிட முடியாமல் நமது உடல் நலத்தை இழந்து வருகிறோம். 

நாம் ஏதேனும் உடல் நலக்குறைவின் காரணமாக மருத்துவரிடம் சென்றால் அவர் உடனடியாக நமக்கு சிறுநீரக பரிசோதனையை செய்து வருமாறு அறிவுறுத்தி ஆலோசனை கூறுவார். நாமும் பரிசோதனை மையத்திற்கு சென்று நமது சிறுநீரகத்தை பரிசோதனை செய்த பின்னர் நமது உடல் செயல்பாடுகள் குறித்து மருத்துவர் கூறுவார். 

நமது சிறுநீரகத்தின் நிறமானது சிவப்பு நிறத்துடனோ அல்லது இரத்தம் கலந்தவாறு வெளியேறும் பட்சத்தில் நமது உடலில் எதோ பிரச்சனை உள்ளதை அறிந்து மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும்.  

நமது உடலின் எதோ ஒரு பாகத்தில் இரத்த போக்கு இருக்கும் பட்சத்தில்., இரத்தமானது சிறுநீரகத்துடன் வெளியேறும். இதனை அலட்சியமாக நினைத்தால் பல விதமான பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும். 

புகை உடலுக்கு பகை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அதிகளவு புகை பிடிக்கும் நபர்களுக்கு சிறுநீரக புற்றுநோயானது ஏற்பட வாய்ப்புள்ளது. சிறுநீரக புற்றுநோயின் அறிகுறியாக இரத்தக்கட்டிகள் சிறுநீரகத்துடன் சேர்ந்து வெளியேறும். 

உடலுக்கு தேவையான நீரை அருந்தாமல் நாம் இருக்கும் பட்சத்தில்., சிறுநீரகத்தை வெளியேற்றாமல் இருக்கும் பட்சத்தில் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாகும். இதன் கர்ணாம்க சிறுநீரகம் வெளியேறும் சமயத்தில் இரத்தமும் வெளியேறி நமக்கு எரிச்சலை வழங்கும். இந்த பிரச்சனை இருக்கும் நபர்கள் உடனடியாக மருத்துவரை சென்று தேவையான பரிசோதனையை செய்து கொள்வது நல்லது. 

சிறுநீரக குழாய்களில் ஏற்படும் பிரச்சனைகள்., ப்ரோஸ்டேட் வீக்கம்., ப்ரோஸ்டேட் புற்றுநோய்., சிறுநீரக செயலிழப்பு., அதிகப்படியான மாத்திரைகள் உட்கொள்தல்., பயாப்ஸி போன்ற பிரச்சனைகள் காரணமாகவும் இரத்தம் வெளியேறும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

during urine release blood you have this problem in your body


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->