“தூங்கும்போது செல்போன்களை அருகே வைக்காதீர்கள்!” மருத்துவர்கள் எச்சரிக்கை!. - Seithipunal
Seithipunal


செல்போன் கதிர்வீச்சு சுகாதார அபாயங்கள் பற்றி ஒரு எச்சரிக்கையை கலிபோர்னியாவின் பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதில், மக்கள் தங்களின் செல்போன் பயன்பாட்டு நேரத்தை  குறைத்து கொள்வதுடன், முடிந்தவரை  செல்போன்களை தள்ளியே வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செல்போன்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு புற்றுநோய், மனநிலை பாதிப்பு மற்றும் ஆண்மைக்குறைவு உள்ளிட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும் தன்மையுள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

செல்போன்கள் அதிகளவு கதிர்வீச்சை வெளிபடுத்தக் கூடியதாக உள்ளதால் அவற்றை மக்கள் அதிகளவில் பயன்படுத்துவது கவலை அளிக்கும் வகையில் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக சி.டி.பி.ஹச் இயக்குனர் டாக்டர் கரேன் ஸ்மித் கூறியுள்ளார்.

செல்போன்களால் புற்றுநோய் கட்டிகள் வருகிறதா என்பது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு உருவாக்கப்பட்ட 2009 CDPH ஆவணத்தை வெளியிடக்கோரி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்ற உத்தரவை அடுத்து, தற்போது ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, செல்போன்களை அதிகநேரம் பயன்படுத்துவதால், கதிர்வீச்சு பாதிப்பால் உடல்நலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் உள்ளது தெரியவந்துள்ளது.

2009 CDPH ஆய்வின் பரிந்துரைகள் :

 1. பொதுமக்கள் தங்களின் கைபேசியை பாக்கெட்டிகளில் வைத்திருக்கக் கூடாது.

2. நீண்ட நேரமாக தங்களின் காதுக்களில் வைத்திருக்கக்கூடாது.

3. தூங்கும் போது  கைபேசியினை பட்டுக்கையில் வைத்து கொண்டே தூங்குவது மிகவும் ஆபத்தானது.

4. வெறும் 2 புள்ளிகளோ அதற்கும் குறைவாகவோ சிக்னல் இருந்தால் செல்போன்களை பயன்படுத்துவதை முடிந்தளவு குறைத்துக் கொள்ள வேண்டும்

5. அதிவேகத்தில் செல்லும்போது சிக்னலை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்வதற்காக செல்போன்கள் அதிக கதிர்வீச்சை வெளியிடுவதால், பயணங்களின்போது செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொள்ள வேண்டும்.

6. செல்போன்களை பாக்கெட்களில் வைப்பதற்கு பதிலாக, பைகளில் வைத்துக் கொள்ளுமாறு பரிந்துரைத்துள்ள CDPH, முடிந்தவரை Headphone பயன்படுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளது.

7.உடலில்  பல பிரச்சனைக்களை  உண்டாக்கும் கருவியாக கைபேசி மாறிவருகின்றது.

8. கைபேசியை  குறைவாக பயன்படுத்துவது நல்லது என சி.டி.பி.ஹச் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

9. பெரியவர்களைவிட, வளரும் குழந்தைகளின் மூளையில் கதிர்வீச்சு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால் குழந்தைகளிடம் செல்போன்களை கொடுப்பதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

don't use phone in bed


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->