இந்த விஷயம் மட்டும் தெரிந்தால் இனி காலை உணவை தவிர்க்கவே மாட்டீர்கள்!! - Seithipunal
Seithipunal


இன்றைய நவீன காலகட்டத்தில் தனது உடல் எடையை குறைப்பதற்கு பெரும்பாலான மக்கள் பெரும்பாலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில்., முதற்படியாக பணி சூழல் மற்றும் பிற சூழலை காரணமாக கூறி காலை உணவை பெரும்பாலும் தவிர்த்து வருகின்றார். மேலும்., உடல் எடை கொண்டவர்கள் சிலர்., சிலரின் ஆலோசனை படி காலை உணவுகளை தவித்து வருகின்றனர். 

காலையில் உணவுகளை தவித்து வருவதன் மூலமாக உடல் எடையானது குறியும் என்று நினைத்து வருகின்றனர். இந்த கருத்தானது முற்றிலும் தவறான ஒரு கருத்து. காலையில் உணவை தவிர்ப்பதன் மூலமாக பல விதமான நோய்களுக்கு நமது உடலானது உள்ளாக வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

வாரத்தின் 7 நாட்களில் சுமார் 4 நாட்களுக்கு மேலாக காலை உணவுகளை தவிர்த்து வரும் பட்சத்தில்., இரண்டாம் கட்ட நீரிழிவு நோய்யானது ஏற்பட வாய்ப்புள்ளது. இது குறித்த ஆய்வானது சுமார் ஒரு இலட்சம் நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டு இந்த முடிவானது வெளியாகியுள்ளது.  

காலையில் உணவை தவிர்ப்பதன் மூலமாக உடலில் உற்பத்தியாகும் இன்சுலின் உற்பத்தி வெகுவாக அதிகரிக்கப்பட்டு., மன அழுத்தம் மற்றும் நீரழிவு பிரச்சனையானது முதற்படியாக உருவாகிறது. 

உலகளவில் நடைபெற்ற இந்த ஆராய்ச்சியில் சுமார் 30 விழுக்காட்டிற்கும் அதிகமான நபர்கள் காலை உணவை தவிர்ப்பதாகவும்., காலை உணவிற்கு பதிலாக நொறுக்கு தீனிகளை அதிகளவில் உண்கின்றனர். காலை உணவுகளை தவிர்ப்பதால் மன அழுத்தமானது அதிகமாகி., இன்சுலின் செயல்பாடானது அதிகரிக்கிறது என்று தெரிவிக்கின்றனர். 

காலை உணவுகளை சரிவர சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இருக்கும் சர்க்கரையின் அளவானது பராமரிக்கப்பட்டு உடல் நலனானது பாதுகாக்கப்படுகிறது. கிராமப்புகளை விட நகர்புறத்தில் வாழ்ந்து வரும் பெரும்பாலானோர் காலை உணவுகளை தவிர்த்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் இளம் வயதுடைய நபர்கள் என்பது அடுத்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. '

இந்தியாவை பொறுத்த வரையில்., நீரழிவு நோய்யால் சுமார் 8.7 விழுக்காடு அளவிற்கான மக்கள் நீரழிவு நோயை சந்தித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 20 வயது முதல் 70 வயது வரை உள்ளவர்கள் ஆவர். நீரழிவு நோய் பரம்பரை நோய் என்று கருதப்பட்டு வந்த வேளையில்., உணவு பழக்கவழக்கத்தால் இது நடந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. 

இந்த தகவலை உறுதி செய்த உலக சுகாதார அமைப்பானது., இந்த பிரச்னையை தவிர்ப்பதற்கு காலை உணவுகளை தவறாமல் எடுத்து கொள்ளவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dont avoid food in morning


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->