சோற்றுக்கற்றாழை இந்த பிரச்சனைகளுக்கு மட்டும் தீர்வல்ல.! நீங்கள் அறியாத ஒரு பிரச்சனைக்கு அசத்தலான தீர்வை வழங்கும்.!!  - Seithipunal
Seithipunal


நமது இல்லங்களில் இருக்கும் கற்றாழை செடியின் மருத்துவ குணங்கள் பெருமளவு நமக்கு நன்மையை வழங்குகிறது. அந்த வகையில்., கற்றாழையை உலர்த்தி பொடியாக வைத்து சாப்பிடுவதன் மூலமாக உடல் வலி குறையும்., உடலுக்கு இளமை பெருகும் மற்றும் அதிகளவு நமது வாழ்க்கையை அதிகரிக்கும். இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் குறித்து இனி காண்போம். 

கற்றாழையை செடியின் உள்பகுதியில் இருக்கும் கூழை எடுத்து சிறிதளவு சாப்பிட்டு வந்தால் கண்பார்வையானது அதிகரிக்கும். இதன் மூலமாக பெண்கள் மற்றும் ஆண்களுக்கு கோடை காலத்தில் ஏற்படும் சிறுநீர் எரிச்சல் மற்றும் சிறுநீரில் இருக்கும் புண்கள் குணமாகும். 

தினமும் காலையில் சாக்லேட் துண்டை போல அளவுள்ள கற்றாழை துண்டை தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் குடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் வெளியேறி., வாயுக்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு நமது உடல் நலமானது பாதுகாக்கப்படும்.   

தினமும் சோற்றுக்கற்றாழையுடன் சிறிதளவு வெண்ணெய்., மிளகுத்தூள் மற்றும் கற்கண்டை சேர்த்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு பிரச்சனை., உடலில் ஏற்படும் அரிப்பு மற்றும் உடலின் உள்ளுறுப்புகளின் வெப்பமானது குறையும். உடல் உஷ்ணம் மற்றும் உடலுக்கு அழகான தோற்றம் கிடைக்கும்.  

சோற்றுக்கற்றாழைக்கு இடையில் வெந்தயத்தை வைத்து கட்டி ஒரு நாள் காத்திருந்து., வெந்தயம் முளை விட்டவுடன் அதனை சாப்பிட்டால் தீராத வயிற்று வலி மற்றும் வயிற்று புண் ஆகியவை நீங்கும். அது மட்டுமல்லாது கற்றாழை சாறுடன் மோரை சேர்த்து குடித்து வந்தால் முகப்பரு போன்ற வெயில் கால நோய்களில் இருந்து தப்பிக்க இயலும்.  

கற்றாழை செடியின் வேர்களை தினமும் பாலில் சேர்த்து குடித்து வந்தால் உயிரணுக்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கும். கற்றாழை சாறுடன் இஞ்சி., சீரகம் மற்றும் நெல்லிக்காயை சேர்த்து சாப்பிட்டு வந்தால் பித்தம்., தலைசுற்றல்., குமட்டல் மற்றும் வாந்தி பிரச்சனையானது குணமாகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

daily to eat sotrukatralai to gain more health and avoid heat problems from summer


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->