சிறுநீரில் மாற்றமா அலட்சியம் வேண்டாம்!. அதனால் வரும் பின்விளைவுகள் என்ன தெரியுமா?. - Seithipunal
Seithipunal



நாகரிகம் வளந்துவருவற்கு ஏற்ப நாம் உண்ணும் உணவு முறைகளும் மாறி வருகின்றன. இன்றைய கால கட்டத்தில் நாம் உண்ணும் உணவு முறைகள் கண்டிப்பாக உடல் ரீதியாக பல  பிரச்சனைகளை உண்டாக்குகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் நாம் அனைவரும் இதை அலட்சியப்படுத்திவருகிறோம்.

நம் உடலில் எந்த ஒரு பிரச்சனை என்றாலும், மருத்துவர்கள் முதலில் கூறுவது சிறு நீர் சோதனைதான். இதை வைத்தே நம் உடம்பில் என்ன நோய் என்று கண்டறியப்படுகிறது.

சிறுநீரின் கலரை வைத்தே ஏதேனும் பிரட்சனை இருக்கிறதா என்று கண்டுபிடித்து விடலாம். இதனாலதான் அணைத்து மருத்துவமனைகளிலும் முதலில் சிறுநீர் சோதனை செய்ய சொல்கின்றனர்.

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க நாட்டு மருத்துவம் கொடுக்கும் நபர்கள் கூட முதலில், பாதிக்கப் பட்டவர் வெளியேற்றும் சிறுநீர் நிறம் என்ன வென்று தான் கேட்பார்கள். ஏனென்றால் நம் உடம்பில் பாதிப்பு வந்தால் முதலில் மற்றம் காட்டுவது சிறுநீரில் தான்.

சிறுநீர் கழிக்கும் போதும் சிவப்பு நிறமாகவோ அல்லது அடர் சிவப்பு நிறமாகவோ  கசிவது போல இருந்தால் உங்கள் சிறுநீரகத்தில் கட்டிகள் இருக்கின்றன என்று அர்த்தம். உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்வது மிகவும் நல்லது.

நீங்கள் சிறுநீர் கழிக்கும் பொது நுரை போன்று தோன்றினால் , நீரிழிவு அல்லது சிறுநீரக கோளாறுகள் ஏற்படுவதற்கான அறிகுறி என்று அர்த்தம். இது ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரகம் சரியாக புரதச்சத்திணை வடிகட்டாது செயல்படுவதுதான் என கூறப்படுகிறது.

உங்கள் சிறு நீர் பழுப்பு நிறமாக தோன்றினால் உங்களுக்கு  கல்லீரலில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம். இதனால் நீங்கள் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். எனவே சிறுநீரில் மாற்றம் ஏற்பட்டால் அலட்சிய படுத்தாதீர்கள் என சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

colour of the urine is indicates the problem of urine


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->