முள்ளங்கியில் உள்ள மருத்துவ குணங்கள் மற்றும் பயன்கள்:  - Seithipunal
Seithipunal


முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன. மேலும் முள்ளங்கி உடலுக்கு தேவையான வைட்டமின் சத்துக்களையும் தாது உப்புக்களையும் அளிக்கின்றன.

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் இயல்புடையது முள்ளங்கி, கோடை காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிப்பதில் மூள்ளங்கி முக்கிய பங்கு வகிக்கிறது.

வெள்ளை முள்ளங்கி மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்தது, சிவப்பு முள்ளங்கி சுவைக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.

முள்ளங்கியில் கால்சியம் சத்து மற்றும் கந்தகமும், பாஸ்பரசும் அதிகம் காணப்படுகிறது.

முள்ளங்கிக் கீரையில் அதிகமான கால்சியம் இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் மிகவும் நல்லது.

முள்ளங்கியின் கிழங்கு, இலை, விதை ஆகிய மூன்றுமே மருத்துவ குணம் கொண்டது.

பச்சிளம் குழந்தைகளுக்கு வரும் ஜலதோஷம், வயிற்றுப் பிரச்சனைகளுக்கு முள்ளங்கிப் பிஞ்சு சாறு சிறந்த மருந்தாகும்.

முள்ளங்கி சாறுடன் கொஞ்சம் தேன் அல்லது சர்க்கரை கலந்து கொடுத்தால் மலச்சிக்கல், சளித் தொந்தரவு போன்ற பிரச்சினைகள் தீரும்.

சிறுநீர்ப் பாதையில் பிரச்சினை உள்ள, சிறுநீர்ப்போக்கு இயல்பாக இல்லாமல் இருக்கும் பெரியவர்களும் இந்த முள்ளங்கிச் சாற்றைக் குடிக்கலாம்.

முள்ளங்கிக்கீரையை எண்ணை விட்டு நன்கு வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டால் நீர்ச்சுருக்கு சிக்கல் நீங்கும்.

ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை கட்டுப்படுத்தும் ஆற்றல் முள்ளங்கிக்கு உள்ளது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த பயனளிக்கும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of mullangi


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->