எலுமிச்சையின் மருத்துவ குணங்கள்! - Seithipunal
Seithipunal


🍋 சுப காரியங்களில் முதல் இடம் வகிக்கும் பழம் எலுமிச்சையாகும். இந்த பழம் உலகெங்கும் நிறைந்து காணப்படுபவை. விலை மலிவாகவும், எல்லா சத்துக்களும் உடைய பழங்களில் எலுமிச்சையும் ஒன்று. மனிதர்களுக்கு ஏற்படும் எல்லாவித நோய்களையும் குணமாக்கும் நிவாரணியாக எலுமிச்சை விளங்குகிறது. எலுமிச்சையின் பல அற்புதமான மருத்துவக் குணங்களை பற்றி இங்கே பார்ப்போம்.

🍋 எலுமிச்சையில் அதிக கால்சியம், ஃபோலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் உள்ளது. இது தாகத்தைப் போக்க உதவும் பானமாகவும் மற்றும் பலவித மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ள பழமாகவும் உள்ளது. எலுமிச்சை பழத்தைப் போல எலுமிச்சை பழத்தின் தோலிலும் ஏராளமான நன்மைகள் உள்ளது.

மருத்துவ குணங்கள் :

🍋 தேள் கொட்டின இடத்தில் எலுமிச்சை பழத்தை இரண்டு துண்டாக வெட்டி தேய்த்தால் விஷம் முறியும்.

🍋 கடுங்காபியில் எலுமிச்சையின் சாற்றை கலந்து குடித்தால் தலைவலி உடனே குணமாகும்.

🍋 எலுமிச்சம் பழத்திற்கு வாந்தி, வாய் குமட்டல், மயக்கம், நீர்வேட்கை, கண் நோய், காது வலி போன்றவற்றை குணப்படுத்தும் தன்மை உள்ளது.

🍋 எலுமிச்சம் பழச்சாற்றை தலையில் தேய்த்து குளித்தால் பித்தம், உடல் உஷ்ணம் போன்றவை குறையும்.

🍋 விரலில் நகச்சுற்று ஏற்பட்டவுடன் எலுமிச்சை பழத்தை துளையிட்டு, விரலை அதனுள் சொருகி வைத்தால் வலி குறையும்.

🍋 எலுமிச்சம் பழச்சாற்றுடன் தேன் கலந்து குடித்து வந்தால் வரட்டு இருமல் தீரும்.

🍋 மருதாணியை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றில் கலந்து பாதத்தில் தடவி வந்தால் எரிச்சல் ஏற்படுவது குறையும்.

🍋 எலுமிச்சம் பழத்தின் விதைகளை நீரில் போட்டு காய்ச்சி, அதில் இருந்து எழும் ஆவியை முகத்தில் படும்படி ஆவி பிடித்தால் முகம் பெலிவு பெறும்.

🍋 உயர்தர பொட்டாசியம், எலுமிச்சை சாற்றில் உள்ளதால் இதய நோயாளிகளின் இதயத்தை பலமாக்குகிறது.

🍋 வெளியூர் பயணத்தின்போது சிறுநீரகத் தொற்று ஏற்படாமல் இருக்க, எலுமிச்சை சாற்றை கையோடு எடுத்துச் செல்லலாம். எலுமிச்சை சாறு, சிறுநீரை அதிகரித்து, தொற்றுக்கள், நச்சுக்களை வெளியேற்றுகிறது.

🍋 எலுமிச்சை, ஆன்டிஆக்ஸிடன் ஆக செயல்பட்டு, ரத்தத்தைச் சுத்திகரிக்கும்.

🍋 காலையில் வெந்நீரில் 5-10 மி.லி. எலுமிச்சை சாறு கலந்து குடிப்பது, உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவும். கொலஸ்ட்ரால், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

🍋 எலுமிச்சை சாற்றை, மிதமான வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்தால் வாய் துர்நாற்றம், பல் வலி, ஈறுகளில் ரத்தம் போன்ற பாதிப்புகள் இருந்தால் சரியாகும்.

🍋 கபம் அதிகம் இருந்தால் 10 மி.லி. எலுமிச்சை சாற்றுடன் ஐந்து மி.லி. இஞ்சிச் சாறு, சிறிது தேன் சேர்த்து, சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

🍋 வயிற்றில் காற்று அடைத்ததுபோல், அழுத்தமாக இருந்தால் சுடுநீரில் எலுமிச்சை சாறு, வறுத்துப் பொடித்த சீரகம் அரை டீஸ்பூன், சிறிது தேன் கலந்து அருந்தலாம். சட்டென காற்று வெளியேறி, வயிறு லேசாகும்.

🍋 மூல நோய் இருப்பவர்கள் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை ஒரு எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டி, அதில் கறுப்பு உப்பு கலந்து, வாயில் அடக்கிக்கொள்ளலாம். வலி, வீரியம் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of lemon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->