நில வேம்பு சாறுக்கு நடிகர் கமல் திடீர் எதிர்ப்பு : யாரும் விநியோகம் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தல்..!! - Seithipunal
Seithipunal


நில வேம்பு சாறு விநியோகம் செய்ய வேண்டாம் என்று தன்னுடைய ரசிகர்களுக்கு நடிகர் கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலின் பாதிப்பால், நாளுக்கு நாள் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இதனால், தனியார் அமைப்புகள், அரசியல் கட்சிகள், தமிழக அரசு உட்பட பலர் நில வேம்பு சாறு விநியோகித்து வருகின்றனர்.

சில டாக்டர்கள், நில வேம்பு சாறு வேலை செய்யவில்லை என்றும், அதனால், தகுந்த மருத்துவரை அணுகி மருந்து எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அதில் உண்மையில்லை, நிலவேம்பு எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது என்று தமிழக அரசும் தனியார் அமைப்புகளும் கூறி வருகின்றனர்.

இந்நிலையில், நிலவேம்புக்கு எதிராக நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். 


அதில், 'சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும்வரை நம் இயக்கத்தார் நிலவேம்பு விநியோகத்தில் ஈடுபடாதிருக்க கேட்டுக்கொள்கிறேன். மற்ற பணிகள் தொடரட்டும்' என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor kamal against nila vembu juice


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->