திமுகவை நம்பாமல் திருமாவளவன் செய்த வேலை! ஒப்புக்கொண்ட வைகோ! விரக்தியின் உச்சத்தில் ஸ்டாலின்! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளுக்கிடையேயான கூட்டணி ஒப்பந்தங்கள் ஏறக்குறைய நிறைவடைந்து விட்ட நிலையில், இன்றோ, நாளையோ எந்த கட்சிகள் எந்த தொகுதியில் போட்டியிடும் என்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளை ஒப்பந்தத்தின்படி பெற்றுள்ளது. இரண்டு தொகுதிகளும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் என கூறப்படுகிறது. வலுவான கூட்டணியை அமைக்க வேண்டும் என்ற காரணத்தினால் கூட்டணி கட்சிகளுக்கு அவர்கள் வாக்கு சதவீதத்தை காட்டிலும் அதிகமான தொகுதிகளை திமுக வாரி வழங்கி உள்ளது. இதனால் திமுக 20 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடக் கூடிய சூழல் நிலவுகிறது. 

இதனால் திமுகவின் வாக்கு வங்கியின் சதவீதம் குறையும் என்பதால் தோழமைக் கட்சிகள், கூட்டணி கட்சிகளை தங்களுடைய உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வைத்து தங்களது வாக்கு வங்கியின் சதவீதத்தை உயர்த்துவதற்கு தீவிரமாக திமுக முயற்சி செய்து வருகிறது. கலைஞர் இல்லாத நிலையில் குறைவான எண்ணிக்கையில் வாக்கு வாங்கி வந்தால் அது திமுகவின் எதிர்காலத்திற்கு பேராபத்து ஆகிவிடும் என்பதால், திமுக தலைவர் மு க ஸ்டாலின் தோழமைக் கட்சிகளை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வற்புறுத்தி  வருகிறார். 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் ஈரோடு தொகுதியில் தங்களுடைய பம்பரம் சின்னத்தில் நிற்காமல் உதயசூரியன் சின்னத்தில் நிற்பதற்கு ஒப்பு கொண்டதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சி தங்களுடைய சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்புவதாக தெரிய வருகிறது. தனி சின்னம் பெறுவதற்காக, அக்கட்சி நிர்வாகிகள் டெல்லியில் முகாமிட்டுள்ள செய்தியை ஊடகங்கள் தெரிவித்த பின் ஸ்டாலின் கடுமையான கோபத்தில் உள்ளாராம். 

கடந்த 2006ஆம் ஆண்டு தேர்தல் முதல் தனி சின்னத்தில் போட்டியிடும் விசிக, தற்போது உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட்டால், வேட்பாளர்கள் திமுகவின் உறுப்பினராக வேண்டும்,  மேலும் திமுக உறுப்பினராக   திருமாவளவன் ஆனால் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் என்ற அந்தஸ்தை இழக்க நேரிடும். இதனால் தனி சின்னத்தில் போட்டியிட விசிக விரும்புகிறது. மேலும் இரண்டு தொகுதியிலும் வெற்றி பெற்றுவிட்டால் அங்கீகாரம் பெற்ற கட்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் மாறிவிடும் வாய்ப்புள்ளது.  

ஆனால் திமுகவோ, திமுகவின் வாக்கு சதவீதத்தை உயர்த்தும் நோக்கில் தான் தங்கள் சின்னத்தில் போட்டியிட வலியுறுத்தி வருகிறது. கூட்டணி ஒப்பந்தத்தின் போதே இது குறித்து பேசப்பட்டுள்ளது. ஆனால் தற்போது விசிக வேறு முடிவை எடுத்து திமுகவிற்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் இந்த இரண்டு கட்சிகள் இடையே முட்டலும் மோதலும் மறைமுகமாக நிலவி வருகிறது. 

திமுகவின் சின்னத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிட தயங்குவதற்கு வேறு ஒரு காரணமும் உள்ளது. ஏனெனில் கடந்த 2001ஆம் ஆண்டு மங்களூர் தொகுதியில் போட்டியிட்ட திருமாவளவன் உதயசூரியன் சின்னத்தில் வெற்றி பெற்றதால் 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட மனக்கசப்பின் பொழுது அவர் தன்னுடைய பதவியை இழக்க நேரிட்டது. ஏனெனில் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் திமுகவின் தலைவர் மற்றும் திமுகவின் கொறடா கட்டுப்பாட்டில் மட்டுமே செயல்பட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck want new symbol for mp election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->