திமுகவில் இணைகிறார் விசிக வேட்பாளர் ரவிக்குமார்! சாதித்து காட்டிய ஸ்டாலின்!   - Seithipunal
Seithipunal


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு விழுப்புரம், சிதம்பரம் ஆகிய இரண்டு தனிதொகுதிகளையும் திமுக ஒதுக்கியுள்ளது. இதனிடையே இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்  போட்டியிடும் தொகுதிகளின் பட்டியலுடன் வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், விடுதலை சிறுத்தை கட்சி வரும் மக்களவை தேர்தலில் மூன்று மாநிலங்களில் போட்டியிடுகிறது என்ற ஆச்சர்ய தகவலை தெரிவித்தார். அதுவும் ஆந்திரா, கேரளா  மாநிலங்களில், 9 தொகுதிகளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  தனித்து போட்டியிடுகிறது. இதில், ஆந்திராவில் 6 தொகுதி, கேரளாவில் 3 தொகுதி அடங்கும். 

தமிழகத்தில் திமுக கூட்டணியில் சிதம்பரத்தில் திருமாவளவன் தனிச்சின்னத்திலும், விழுப்புரத்தில் விசிக பொதுச்செயலாளர் ரவிகுமார் உதயசூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனர். அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருப்பதால் அவர் விசிக உறுப்பினராக போட்டியிட முடியாது. மாறாக அவர் திமுகவின் உறுப்பினராக இணைந்தால் தான் போட்டியிட முடியும் என கூறப்படுகிறது. அதனால் அவர் திமுகவில் இணைவார் என தெரிகிறது. 

அவரைப்போலவே உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக உள்ள கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி வேட்பாளர் ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் பச்சமுத்து ஆகியோரும் திமுகவில் உறுப்பினராக ஆன பிறகு தான் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. 

திமுக நேரடியாக 20 தொகுதியில் மட்டுமே போட்டியிடுவதால் நிரந்தர வாக்குவங்கி குறையும் என்பதால் கூட்டணி கட்சிகளை உதயசூரியன்  சின்னத்தில் போட்டியிட நிர்பந்தித்து அதில் சாதித்துள்ளது. இதில் வைகோவின் மதிமுகவும் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vck candidate will join dmk for rising sun symbol


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->