ஸ்டாலின் அவசரத்தால் தனித்தன்மையை இழந்து நிற்கும் அவலம்! மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கும் திமுக! - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலுக்காக ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக, பாஜக கூட்டணிக்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். ஆனால் நீண்டகால கூட்டணியான திமுக காங்கிரஸ் கூட்டணியில் குழப்பம் நிலவி கொண்டு தான் உள்ளது. 

கடந்த 2004 முதல் கூட்டணியில் இருந்து வரும் திமுக காங்கிரஸ் கட்சிகளானது, 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டனர். பின்னர் மீண்டும் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணி சேர்ந்து கொண்ட கட்சிகள் தற்போது மீண்டும் கூட்டணி அமைத்து போட்டியிட தயாராகி வருகின்றனர்.

தமிழகத்தில் கடந்த 2004 இல் 11 நாடாளுமன்ற தொகுதிகளிலும் 2009 இல் 15 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் தற்போது மீண்டும் 2004 இல் வழங்கிய அதே 11 தொகுதிகளை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் திமுக தரப்பில் 5 தொகுதிகளுக்கு மேல் முடியாது என்று உறுதியாக கூறிவிட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2011 சட்டமன்றம், 2014 நாடாளுமன்றம், 2016 சட்டமன்ற தேர்தல் என அனைத்திலுமே தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியானது பெரிய அளவில் வெற்றியை பெறவில்லை. இதன் காரணமாக 2019 நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கொடுக்கும் தொகுதியில் தான் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என்ற நிலை தான் இருந்தது. 
 
அண்மையில் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது காங்கிரஸ்க்கு புதிய தெம்பை ஊட்டியது. அது ஊடகங்களில் பெரிதாக பேசப்பட்டது. (ஆனால் உண்மையில் சத்தீஸ்கர் மாநிலம் தவிர்த்து, அது பெரிய வெற்றி இல்லை. ஆட்சிக்கு எதிரான மனநிலையில் கூட இழுபறியில் தான் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியது.) அதனை தங்கள் கூட்டணிக்கு சாதகமாக்க ஆசைப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் அவசரப்பட்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர் வேட்பாளர் என அறிவித்து காங்கிரஸின் கூட்டணிக்குள் திமுகவை அடக்கி கொண்டார். ஆனால் இந்த அறிவிப்பை நாட்டின் வேறு எந்த எதிர்க்கட்சிகளும் பெரிதாக ரசிக்கவில்லை என்பது தான் திமுகவின் துரதிஷ்ட்டம். 

இதற்கிடையே டெல்லி சென்ற திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி காங்கிரஸ் தலைவர்களை  டெல்லியில் சந்தித்துப் பேசிய பிறகு கூட்டணி உடன்பாடு  ஏற்படாத காரணத்தினால் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியை உடனடியாக டெல்லிக்கு வருமாறு காங்கிரஸ் தலைமை அழைத்து உள்ளது. தற்போது காங்கிரஸ் திமுகவிற்கு பல நிபந்தனைகள் வைப்பதாக கூறப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் ஸ்டாலினின் அவசர அறிவிப்பு தான் என திமுகவினர் புலம்பி வருகின்றனர். இதனால் தான் திமுக நிர்வாகிகள் மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவித்து வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

stalin over confident damage dmk future


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->