செந்தில் பாலாஜி திமுகவில் இணைந்தால்?! இது என்ன மாதிரியான அரசியல்! சில சுவாரசியமான தகவல்கள்!  - Seithipunal
Seithipunal


போக்குவரத்து துறை அமைச்சராக திமுக ஆட்சி காலத்தில் இருந்தவர் திருச்சி மாவட்ட கழக செயலாளர் கே.என்.நேரு. அவர் போக்குவரத்து துறையில் ஊழல் செய்துள்ளார் என்று கண்டுபிடித்து மானிய கோரிக்கை விவாதத்தின் போது சட்டசபையில் செப்டம்பர் 10 2011 இல் பேசியவர் அப்போதைய போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில்பாலாஜி. 

கடந்த 2015 இல் அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் 2016 இல் போக்குவரத்து துறை அமைச்சரான தற்போதைய போக்குவரத்து துறை அமைச்சரான விஜயபாஸ்கர், செந்தில் பாலாஜி தினகரன் அணிக்கு போன பிறகு  போக்குவரத்து துறையில் செந்தில் பாலாஜி ஊழல் செய்துள்ளார் என இந்த வருடம் பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி அறிவித்தார். ஆனால் ஒருத்தர் கூட ஊழல் செய்ததாக நிரூபிக்கப்படவில்லை. 

திமுகவும், அதிமுகவும் ஆட்சிக்கு வரும் போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் பெரிதுபடுத்தப்பட்டு, பின்னர் புஷ்வாணமாகி விடுவது வழக்கமான ஒன்று தான். இது இரண்டு கட்சிகளுக்குமான எழுதப்படாத விதி. தற்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் இணைகிறார். 

அவர் இணையும் போது கேஎன் நேருவும், செந்தில் பாலாஜியும் பக்கத்து பக்கத்து மாவட்ட திமுக பிரமுகர்கள் ஆவார்கள். முன்பு ஊழல் குற்றச்சாட்டு கூறிய அதே செந்தில் பாலாஜி தான் நேருவுடன் இணைந்து அரசியல் செய்ய உள்ளார். ஆனால் இது திமுக அதிமுகவை பொறுத்தவரை பெரிய விஷயம் இல்லை. 

ஏனெனில் ஜெயலலிதாவை எதிர்த்து அரசியல் செய்த பரிதி இளம்வழுதியும் திமுகவில் இருந்து அதிமுக சென்று ஜெயலலிதாவுடன் இணைந்து அரசியல் செய்தார், கருணாநிதியை எதிர்த்து அரசியல் செய்துவிட்டு அதிமுகவில் இருந்த திமுக வந்த எ.வ. வேலுவும், சேகர் பாபுவும் தான் திமுகவின் இன்றைய முக்கிய புள்ளிகள். இந்த பட்டியலில் செந்தில் பாலாஜியும் இணைவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். செந்தில் பாலாஜி ஏற்கனவே மதிமுக, திமுக கட்சிகளில் பயணித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

senthil balaji will join dmk and will work with kn nehru


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->