புத்திர தோஷம் வரக் காரணம் என்ன? அதனை சரி செய்ய என்ன பரிகாரம்? - Seithipunal
Seithipunal


புத்திர தோஷம் வரக் காரணம்:

நமக்கு ஏற்படும் தோஷங்கள் அனைத்தும் நாம் முற்பிறவியில் செய்த கர்மவினைகளை பொறுத்தே அமையும். முற்பிறவியில் பெற்றோர்களை மதிக்காமல் கொடுமைப்படுத்தினால் அவர்களின் சாபத்தால் புத்திர தோஷம் வரும் என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகிறது. முன்னோர்களுக்கு முறையாக ஈமக்கடன் செய்யாமல் இருந்தாலும் புத்திர தோஷம் ஏற்படும் என கூறப்படுகிறது. 

புத்திரனால் சொத்து இழப்பு :

புத்திர ஸ்தானதிபதி 5, 8, 12 போன்ற இடங்களில் அமையப் பெற்றிருந்தாலும் அசுபர் பார்வை பெற்றாலும் அவருடைய பிள்ளைகள் கெட்டபுத்தி உள்ளவர்களாகவும், திருடர்களாகவும் இருப்பர்.

அதுபோல 5-ம் வீட்டிற்கு அதிபதி பலவீனம் அடைந்து விரயாதிபதி என்று சொல்லப்படும் 12-ம் வீட்டிற்கு அதிபதியோடு கூடினாலும் புத்திரனால் பணவிரயம், சொத்து இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் உண்டாகும்.

புத்திர வழியில் சந்தோஷம் யாருக்கு?

புத்திரஸ்தானதிபதி புத்திரஸ்தானத்தில் அமையப்பெற்று 9-ம் வீட்டிற்கு அதிபதி 9-ல் வீற்றிருந்தால் புத்திர வழியில் சந்தோஷம் ஏற்படும். அவரோடு புத்திரகாரகனாகிய குருவும் இணைந்து காணப்பட்டால் புத்திர வழியில் சந்தோஷமும் பூரிப்பும் ஏற்படும். 

புத்திர வழியில் கெடுதி யாருக்கு?

புத்திர ஸ்தானத்தில் 6-ம் வீட்டிற்கு அதிபதி அமையப்பெற்றாலும் புத்திர ஸ்தானதிபதி பகைவர்களோடு கூடி பலம் குன்றியிருந்தாலும், புத்திர வழியில் சஞ்சலம், பொருள் இழப்பு போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

puthira thosam reason


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->