சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்தில் கலந்துகொண்டு, சிறப்பித்த சோழ வாரிசுகளான பிச்சாவரம் ஜமீன் குடும்பத்தினர்!! - Seithipunal
Seithipunal


சிதம்பரம் நடராஜர் கோவிலைக் கட்டிய சோழர்களின் வழிவந்த வாரிசுகளுக்கு அக்கோவிலில் நடைபெறும் ஆருத்ரா தரிசனத்தின் பொழுது சிறப்பு தரிசனம் வழங்கப்படும். நிகழ்வு தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வருகிறது. மார்கழி உற்சவமான இன்றும் ஆருத்ரா தரிசனத்தில் கலந்துகொண்டு, சோழ வாரிசுகள் விழாவை சிறப்பித்தனர். 

சிதம்பரம் கோவிலின் சிறப்பு:  "கோயில் என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோயிலை தான் குறிக்கும் என்கிறது கோயில் புராணம். மற்ற எந்த கோவிலும் சிதம்பரம் நடராஜர் கோவில் அளவுக்கு சிறப்பு வாய்ந்தது இல்லையாம். காரணம், சிவன் மற்ற இடங்களில் லிங்க வடிவில் இருப்பார். ஆனால் இந்த கோவிலில் அரூபமாக இருப்பார். அரூபம் என்றால் உருவமற்றது என்று பொருள். 

நடராஜர் கோவிலும், சோழர்களும்: சில தலைமுறைகளுக்கு முன்பு, தினமும் அதிகாலை 4 மணிக்கு பூஜை செய்து சாமியை ஊர்வலமாக எடுத்துச் செல்கையில் ஆடவல்லானுக்கு வீட்டிற்கு வீடு தீபாராதனை காட்டுவர். அவ்வாறு செல்கையில் முதலில் சோழவாரிசுகளின்  இருப்பிடத்திற்கு, சென்று தீபாராதனை முடிந்த பிறகு தான் தெருவில் மற்றவர்களுக்கு வழிபட அனுமதி உண்டு. அதே போல் கடைசி தீபாராதனையும் அவர்கள் தான் காட்டுவார்கள்.

கோவிலின் உரிமையாளரான சோழவாரிசுகளுக்கு  எப்போதும் முதன்மை மரியாதை செய்யப்படுவது வழக்கம். கோவிலை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தமலையால், கோயிலின் சாவி இந்த சோழ குடும்பத்திடம் தான் இருந்தது. 

தினமும் இச்சாவியை பெறுவதற்காக, தீட்சதர்கள் காலை நான்கு மணிக்கு முன்னரே சென்று, சாவியை பல்லக்கில் வாங்கி வந்து கோவிலை திறந்து மீண்டும் இரவு நடை சாத்தப்படும் நேரமான 10:30 கு பின்னர் பல்லக்கில் சுமந்தபடி, சாவியை எடுத்து சென்று சோழமன்னர்களின் வீட்டில் ஒப்படைப்பது வழக்கம். 

இச்சிரமத்தின் காரணமாக நம்பிக்கையான தீட்சிதர்களிடம் சாவி ஒப்படைக்கப்பட்டது. பிறகு, காலப்போக்கில் சோழவாரிசுகள் பொருளாதார ரீதியில் வீழ்ச்சி அடைய துவங்கியதும், கோயில் அந்த கோயிலின் தீட்சிதர்கள் கைக்கு மாறியது.

முடிசூட்டும் நிகழ்வு: இக்கோவிலின் தீட்சிதர்கள் சோழர்களை தவிர்த்து எவருக்கும் முடிசூட்ட மாட்டார்கள். காரணம், பெரியபுராணம் சொல்கின்றது, "சோழனை தவிர்த்து எவருக்கும் முடிசூட்ட மாட்டோம்" என்பது, இந்த தீட்சிதர்களின் முன்னோர்கள் சோழர்களுக்கு  கொடுத்த வாக்கு என்கிறது.

சோழமண்டகப்படி: சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி மற்றும் ஆனி ஆகிய மாதங்களில் சோழ வாரிசுகளுக்கு மண்டகப்படி செய்வது வழக்கமாகும். அதேப்போல், சோழமண்டகப்படிக்கு முதல் நாளான மார்கழி உற்சவத்தில் ஆருத்ரா தரினத்தில், முதல் தரிசனமும் இந்த சோழ வாரிசுகளுக்கே கொடுக்கப்படுகிறது.

தற்கால சோழவாரிசுகள்:

பாளையக்காரர்களான இந்த ஜாமீன் வாரிசுகளில், சோழமன்னனாக முடிசூட்ட பட்டவர், 1978 ல் ' ராஜ ராஜ ஸ்ரீ சிதம்பரநாத சூரப்ப சோழனார்' என்பவர் ஆவார். இவரே பிச்சாவரம் ஜாமீன் வாரிசுகளில் கடைசியாக முடிசூட்டப்பட்ட அரசன் ஆவர். இவரது வழி தோன்றலே இன்று வரை சிதம்பரத்தில் முதல்மரியாதைக்கு உள்ளாவது. 

இவரது வாரிசுகளாக மிச்சம் இருப்பது கணவரை இழந்த சாந்தி தேவி அம்மையார் மற்றும் அவரது இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் மட்டுமே!! சாந்தி தேவி அம்மையாரின் இளைய மகனான 'மன்னர் மன்னன்' என்பவருக்கு இன்னும் சிறிது நாட்களில் முடிசூட்டப்பட இருக்கவே சோழவாரிசுகளாக அனைத்து நிகழ்வுகளிலும் முன்னின்று மரியாதையை பெற்று வருவதும் இவரே!! ஆவார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

progeny of chola in chidambaram


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->