மத்திய சென்னை பாமக வேட்பாளர், டாக்டர் ராமதாசை தொடர்பு கொண்டு பேசியதன் காரணம்! என்ன தான் நடந்தது?! - Seithipunal
Seithipunal


அதிமுக தலைமையில், தேமுதிக, பாமக, பாஜக, புரட்சி பாரதம், தமாக,புதிய தமிழகம், புதிய நீதி கட்சி மேலும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறது.. அந்த கூட்டணியில் முதன்முறையாக பாட்டாளி மக்கள் கட்சி  மத்திய சென்னையில் 
சாம் பால் என்பவரை அதிமுக கூட்டணியின் வேட்பாளராக அறிவித்தது,  பாமக வேட்பாளாரான அவர் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார்..

வேட்பாளரை அறிமுகம் செய்ய தொகுதிக்குட்பட்ட கூட்டணி கட்சிகளின் முக்கிய பொறுப்பாளர்களை சந்திப்பது வழக்கம், முதல் நாளான நேற்று பாமக வேட்பாளர் சாம்பால் தன்னை அறிமுகம் செய்துகொள்ள சென்றுள்ளார்.. அப்போது இரண்டு வெவ்வேறு கட்சியின் தொண்டர்கள் அவரது வீட்டிற்கு சென்று நேரில் வாழ்த்தியள்ளனர். 

 

ஒருவர் அதிமுக, மற்றொருவர் தேமுதிக, இருவரும் நெருங்கிய நண்பர்கள், முகநூலில் சாம்பால் அவர்களின் பதிவை பார்த்துவிட்டு நேராக வந்ததாகவும்,உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவோம், எங்களால் முடிந்த வேலையை செய்கிறோம் என்றும் கூறியுள்ளனர்.

பின்னர் வேட்பாளர் முக்கிய பொறுப்பாளர்களை சந்திக்க புறப்பட்டதும், அவர்களும் உடன் சென்ற மற்றுமொரு காரில் வேட்பாளருடன் சென்றுள்ளனர். சந்திப்பெல்லாம் முடித்து இரவு சுமார் 9;00மணிக்கு வேட்பாளர் உட்பட எல்லோரும் வீடு திரும்பியதும், இவர்கள் காரை விட்டு இறங்கி வேட்பாளரிடம் போயிட்டு வரோம் என்று சொல்லி, அவர்கள் கொண்டுவந்த டூவீலரை ஸ்டார்ட் செய்துள்ளனர், உடனே வேட்பாளர் - அண்ணே சாப்பிட்டு போங்க இவ்ளோ நேரம் ஆகிடுச்சு என்று சொல்லியுள்ளார்..

வேணாம்னே, பரவாயில்லை நாங்க கிளம்புறோம் என்று சொல்ல. வேட்பாளருடன் இருந்த ஒருவர் ஒரு சிறு தொகையை அவர்கள் கையில் கொடுக்க முயற்சிக்க.. அய்ய, இன்னா சார் அசிங்கப்படுத்துற, காசு எதுக்கு, நான் என் கட்சி சொன்ன வேலையை செய்றேன், 
எங்களுக்கு டாக்டர் அய்யாவை ரொம்பப் புடிக்கும், மத்தவங்க மாதிரி ஆதாயத்துக்காக பேச மாட்டாரு, தப்புன்னா தப்பு, நேரடியா மூஞ்ச பார்த்து கேட்டிடுவாரு..என சொல்லி.. நாங்க கிளம்புறோம், நாளைக்கு கொஞ்சம் வேலை இருக்கு வரமுடியாது, நாளானைக்கு வரோம்,  நீங்க பேஸ் புக்ல போடுங்க, பார்த்துட்டு வந்துட்ரோம்.. என கூறி கிளம்பிவிட்டனர்..

வேட்பாளர் சாம் பால் நீண்ட காலமாக பொதுசேவையில் ஈடுபட்டு வந்தாலும் அரசியலுக்கு புதிது என்பதால் இந்த சம்பவம் அவரை கண்கலங்க வைத்துள்ளது.. அதே நெகிழ்ச்சியோடு தனது கட்சி தலைமைக்கு போன் போட்டு..அங்கிள், ( மருத்துவர் ராமதாசை அவர் முகநூலில் கூட அவ்வாறு தான் குறிப்பிடுகிறார்). நான் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று நடந்த சம்பவத்தை சொல்லி பூரிப்படைந்துள்ளார்..

இந்த சம்பவத்தை தொடர்ந்து பாமகவும் தனது தொண்டர்களை மிக வேகமாக முடிக்கிவிட்டுள்ளது, பாமகவினர் இந்த சம்பவத்தை நெகிழ்ச்சியோடு பகிர்ந்தும் வருகின்றனர்.. திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், அதிமுக கூட்டணி கட்சிகளுக்குள் முரண்பாடுகள் உள்ளது,
அவர்கள் கூட்டணி கட்சிகளுக்குள் ஓட்டு பறிமாற்றம் இருக்காது என்றும் வேலை செய்ய வரமாட்டார்கள், நாம் எளிதாக வென்றுவிடலாம் என்று எதிர்கட்சிகள் பேசிக்கொண்டு இருந்த நிலையில்.. இந்த நெகிழ்ச்சியான சம்பவம் கள நிலவரத்தை மாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது..

கூட்டணிக்கு முன்பு எலியும் பூனையுமாக இருந்தவர்கள், இப்படியுமா இருப்பார்கள் என்றால்... அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா... என்றும், தற்போது இணைந்து ஒற்றுமையாக பணியாற்றினால் தான் வெற்றி பெற முடியும் என நன்றாக புரிந்துகொண்டனர் என்றும் பலரும் பேசி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pmk central Chennai candidate sam paul


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->