ஓபிஎஸ் பக்கம் அடிக்கும் அதிஷ்ட காற்று! கொண்டாட்டமாக ரசிக்கும் இபிஎஸ்!  - Seithipunal
Seithipunal


தமிழக துணை முதலமைச்சர் ஓபிஎஸ் அவர்களின் அரசியல் வாழ்க்கை எப்படியும் இதில் கவிழ்ந்து விடும் என திமுக பெரிதாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு வழக்கு ஓபிஎஸ் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் மீதான 11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு. தமிழக அரசை எதிர்த்து அவர்கள் வாக்களித்ததால் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என அறிவிக்கக் கோரி திமுக தரப்பிலும், தினகரன் தரப்பிலும் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு தற்போது டெல்லி உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. 

இந்த வழக்கத்தின் விசாரணை முடிந்து இறுதி நிலையில் இருந்தது. இந்த வழக்கானது, விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டியது ஜனவரி மாதம் 17 ஆம் தேதி.  அதன் பிறகு ஜனவரி 30-ஆம் தேதி விசாரணைக்கு வந்திருக்க வேண்டும், அப்போதும் வழக்கு விசாரணைக்கு வரவே இல்லை. பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி விசாரணைக்கு வந்திருக்கவேண்டும், அப்போதும் வரவில்லை அதற்கடுத்து 11ம் தேதி விசாரணைக்கு வந்து இருக்க வேண்டும், அப்பொழுதும் வரவில்லை. 

மற்ற வழக்குகள் இருப்பதாக காரணம் கூறப்பட்டு இந்த வழக்கு விசாரணை பட்டியலுக்கே வரவில்லை என்பது தான் ஆச்சர்யம்.  இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சிக்ரி அவர்கள் வருகின்ற மார்ச் 6 ஆம் தேதி ஒய்வு பெற உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த வழக்கில் தேர்தலுக்கு முன் தீர்ப்பு வராது என கருதப்படுகிறது. அதனால் அவருடைய பதவிக்கும்,  அதிமுக ஆட்சிக்கும் ஒரு ஆபத்தும் வராது என்கிற ஒரு சூழல் இருக்கின்றது. இதனால் ஆட்சி கலையாது  என்பதால் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டாட்டமாக ரசிக்கத்தானே செய்வார்.

இதனை பயன்படுத்தி அதிமுக நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியை தைரியமாக பேசும் என தெரிகிறது. ஒருவேளை தற்சமயம் அந்த வழக்கில் தீர்ப்பு கொடுக்கப்பட்டு அதிமுக ஆட்சி களைந்தால், அது அதிமுகவிற்கு பரிதாபத்தை ஏற்படுத்தி இன்னும் சாதகமானாலும் ஆச்சர்யமில்லை. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops case delay behind the reason


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->