உச்சகட்ட விரக்தியில் திமுக தலைவர் முக ஸ்டாலின்! இதுவரை வெளியாகாத ரகசியம் வெளியானது!   - Seithipunal
Seithipunal


அதிமுக பாமக கட்சிகள் இடையே கூட்டணி அமைந்ததில் திமுகவினரை விட, திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதிகமாக அதிருப்தியில் உள்ளதாக விமர்சனங்கள் சமூக வலைத்தளங்களில் வருகிறது. 

நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் அதிமுக திமுக கட்சிகள் இடையே பாட்டாளி மக்கள் கட்சியுடன் கூட்டணி வைப்பது யார் என்ற போட்டி கடுமையாக நடைபெற்றது. முதலில் இருந்தே அதிமுக தரப்பில் பாமகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தாலும், எந்த பக்கமும் சாயாமல் பாமக மௌனம் காத்துவந்தது.  இதற்கிடையே அதிமுக பாமக கூட்டணி தான் அமையும் என ஊடகங்கள் பேச ஆரம்பிக்க, அதுவரை அதுகுறித்து சிந்திக்காத திமுக, ஊடகங்களில் வரும் கருத்து கணிப்புகள் இல்லாமல் ஒரு கருத்துக்கணிப்பை மக்களிடையே அவர்கள் கட்சியை வைத்து எடுத்த போது எதிர்பாராத அதிர்ச்சி காத்திருந்தது. 

அவர்கள் கட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் கடந்த சட்டமன்ற தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்டு 5.3 சதவீத வாக்குகளைப் பெற்று இருந்தாலும் தற்போது வட தமிழகத்தில் மட்டும் நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு, சில தொகுதிகளில் மட்டுமே 20 முதல் 25 சதவீத மக்கள் வைத்திருந்த பாமக, தற்போது சராசரியாக 22 சதவீத வாக்குகளை வைத்து உள்ளதாக  திமுகவினர் அறிக்கை கொடுக்க அதன் பிறகுதான் அதிர்ந்து போனது திமுக. 

அதுவரை பாமக கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த வேலு, பொன்முடி போன்ற தலைவர்களை அழைத்துப் பேசிய மு க ஸ்டாலின் நம் கூட்டணியில் பாமக இருந்தால் மட்டும் தான் வெற்றி பெற முடியும். இல்லை என்றால் வட தமிழகம் முழுவதும் காலியாகி விடும் என்று கூறியதையடுத்து தான் திமுக தரப்பில், பாமகவை கொண்டு வர  கடுமையாக முயற்சி செய்யப்பட்டது. ஆனால் அந்த கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை மேலும் திமுகவுடன் கூட்டணி இணைவதில் பாமகவிற்கு ஆரம்பம் முதலே விருப்பமும் இல்லை எனவும் கூறப்படுகிறது. அதன்படியே தான் அவர்கள் அதிமுகவை தேர்ந்தெடுத்து அதிமுகவின் அழைப்பை ஏற்று அந்த கூட்டணியில் இணைந்துள்ளார். 

மேலும் திமுக  தன்னுடைய கூட்டணி கட்சியான காங்கிரஸ் வழியாக பாமகவிற்கு பகிரங்க அழைப்பு விடுத்தது ஆயினும் அதனை தவிர்த்து விட்டு அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளது பாமக. இதனால் அதிர்ச்சி அடைந்த முக ஸ்டாலின் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீது கடுமையான சொற்களால் பொதுக்கூட்டத்தில் விமர்சனங்களை பேசி உள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin upset for admk pmk coalition


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->