எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய முக ஸ்டாலின்! கடும் கொந்தளிப்பில் திமுகவினர்!  - Seithipunal
Seithipunal


வருகின்ற மக்களவைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்று ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். ஏனெனில் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இது மிகவும் முக்கியமான தேர்தலாகும். அதிமுக அதன் தலைமை ஜெயலலிதாவை இழந்து சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். திமுக தலைவராக இருந்த கலைஞரின் மறைவிற்கு பிறகு திமுக சந்திக்கும் முதல் தேர்தல், அதோடு மட்டுமில்லாமல் கடந்த 2011 முதல் நான்கு தேர்தலில் படுதோல்வியை சந்தித்த திமுக சந்திக்கும் தேர்தல். இந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தால் திமுக மீதான நம்பிக்கையும், ஸ்டாலினின் தலைமையின் மீதும் சந்தேகம் எழும் என்ற நிலை உள்ளது. 

இதனை கவனத்தில் கொண்டு திமுக அதிமுக இரண்டு கட்சிகளுமே அடுத்த நிலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியை எப்படியாவது தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்து விட வேண்டும் என பாமகவை நாடிவந்த நிலையில், பாமகவோ அதிமுகவை தேர்ந்தெடுத்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்தது. இதில் கடுமையான விரக்தியான திமுக தலைவர் மு க ஸ்டாலின் அன்றே கடுமையான வார்த்தைகளால் டாக்டர் ராமதாசை விமர்சனம் செய்திருந்தார். ஆனால் பாவம் அவரும் பாமகவுடன் கூட்டணி பேசியிருந்தார் என்பதை மறந்து விட்டார். 

அதேபோல் அன்மைகாலமாக திமுக தன்னுடைய இயலாமையை தங்களது கட்சி நாளிதழான முரசொலியில் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. திமுகவுடன் ஒத்துவராத ஒவ்வொரு அரசியல் தலைவர்களையும் கடுமையாக விமர்சனம் செய்து முரசொலியில் கட்டுரை வரைவது வழக்கமான ஒன்றாகும்.  அதேபோல் இன்றும் டாக்டர் ராமதாஸ் குறித்து முரசொலியில் கட்டுரை வெளியிட்டுள்ளது.  பாமக திராவிட கட்சியுடன் மீண்டும்  கூட்டணி சேர்ந்தது. மேலும் கடுமையாக அதிமுக அரசை விமர்சித்துவிட்டு அவர்களுடன் எப்படி கூட்டணி சேர்ந்தார்கள் என்பது தான் திமுக தரப்பில் வைக்கப்படும் விமர்சனம் . 

இதற்கு பாமக தரப்பில் கொடுத்த விளக்கமானது, ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக,  89 சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்துள்ள எதிர்கட்சித் தலைவராக, திமுகவும், முக ஸ்டாலினும் செயல்பட்டிருந்தால் பாமக இவ்வளவு கடுமையாக அதிமுக அரசை விமர்சனம் செய்வதற்கு வேலை இருக்காது எனவும், எதிர்க்கட்சித் தலைவரான கடமையிலிருந்து ஸ்டாலின் தவறியாதலும், அரசின் தவறுகளை சுட்டிக்காட்ட தெரியாததாலும், அந்த வேலைகளை பாமக சரியாக செய்து தங்களை எதிர்கட்சியாக மக்களிடையே தக்கவைத்துகொண்டது. இந்த செயல்பாடு தான் பாமக மீதான இவ்வளவு எதிர்பார்ப்புக்கு காரணம் எனவும் விளக்கமளித்தனர். 

அதேபோல பாமகவின் விமர்சனங்களால் அவ்வப்போது அரசின் செயல்பாடுகளை மாற்றி அமைத்த வரலாறுகளும் உண்டு என்பதனை பாமகவினர் சுட்டிகாட்டி வருகின்றனர். பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக செயல்படவே முடியதா திமுகவுடன் கூட்டணி சேர்வதை காட்டிலும், நமது விமர்சனங்களை, அறிக்கைகளை கொண்டு தங்களுது செயல்பாடுகளில் மக்களுக்காக மாறுதலை செய்யும் அதிமுகவை ஆதரிக்க பாமக முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில் திமுகவினர் அதிமுக பாமக கூட்டணியை விமர்சிக்க இருக்கும் காரணமே, திராவிட  கட்சிகளுடன் பாமக கூட்டணி இல்லை என்று அறிவித்தது தான். அதனை வைத்து தான் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகிறார்கள். ஆனால் இதனை பொய்யாக்கும் விதமாக மு க ஸ்டாலின் மீண்டும் ஒரு முறை உளறல் பேச்சாக, அதிமுக திராவிட இயக்கமே இல்லை அதனால்தான் பாமக அதிமுக கூட்டணி அமைந்து உள்ளது என்று அந்த கூட்டணியை நியாயபடுத்தும் விதமாக பேசிவிட்டார். இன்று அவர் கலந்து கொண்ட விழாவில், பேசிய போது அவரது கட்சித் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இவர் பேசாமல் இருந்தாலே போதுமே, இவரை வைத்துக்கொண்டு எப்படி வெற்றிபெறுவது என்றே தெரியவில்லை என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள் உடன்பிறப்புகள்..... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mk stalin one more time confuse because of pmk


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->