உச்சகட்ட குழப்பத்தில் கடலூர் தொகுதி! ஷாக்கான தலைமை! அதிர்ச்சியில் வேட்பாளர்! - Seithipunal
Seithipunal


கடலூர் நாடாளுமன்ற தொகுதியில் கடலூர் திமுக வேட்பாளர் ரமேஷ்  எல்லா புறத்தில் இருந்தும் சிக்கி தவிப்பதாக திமுகவின் முக்கிய நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். 

நாம் அப்படி என்ன தான் பிரச்சினை என்று கேட்டதற்கு, அந்த முக்கிய நிர்வாகி தெரிவித்தது, தற்போதைய கடலூர் திமுக என்றாலே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தான். இவரின் தந்தையை கேட்டு தான் கருணாநிதி எந்த முடிவையும் எடுப்பாராம். ஏன் இப்போது கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் கணேசனும் கூட எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்தின் பரிந்துரையின் பெயரிலேயே நியமிக்கப்பட்டவர். 

இந்த தேர்தலில் போட்டியிட எம்ஆர்கே பன்னீர்செல்வம் மகனுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் கடலூரில் சிறுபான்மை சமூகமான செட்டியார் சமூகத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், செல்வாக்கு மிக்க தலைவரும் தனது வாரிசுக்கு சீட் கிடைக்கவில்லை என வருத்தத்துடன் இருந்த நிலையில், திமுக தலைமை அடுத்த தாக்குதல் நடத்தியது. அதாவது செல்வாக்கு மிக்க எம்ஆர்கே பன்னீர்செல்வம் கடலூர் தேர்தல் பணிகளை கவனிக்க வேண்டாம் எனவும், சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியை மட்டும் கவனித்தால் போதும் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவரது புகைப்படங்களை கூட ப்ளக்ஸ், போஸ்டரில் பயன்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இது அவரது ஆதரவாளர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.

முதன்மை பொறுப்பாளர்களாக திமுகவில் வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்ட நிலையில், வேட்பாளர்களாக நிறுத்துவதிலும் பெரும்பான்மை சமூகமான வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டதாக அந்த சமூக மக்களிடையே பெருங்கோபத்தை  திமுக மீது திரும்பியிருக்கிறது. ஆனால் அதே சமயம் திமுகவில் இருக்கும் மாவட்ட செயலாளர்களில் ஒரே ஒருவர் தான் தலித் சமுதாயம். அதுவும் இந்த மாவட்டம் தான். இங்கே தன்னுடைய போட்டியாளரான சபா ராஜேந்திரன் வந்துவிடக்கூடாது என்பதற்காக தன்னுடைய விசுவாசி வே கணேசனனை பரிந்துரை செய்ததே எம்ஆர்கே பன்னீர்செல்வம் தான். ஆனால் அவரை வைத்தே திமுக தலைமை பன்னீர்செல்வத்தை முடக்கும் வேலையை கச்சிதமாக செய்து வருகிறது. 

பெரும்பான்மை வன்னியர்களுக்கு தான் சீட் கொடுக்கவில்லை. வட தமிழகத்திலே பெரும்பான்மையாக இருக்கும் மற்றொரு சமுதாயமான ஆதி திராவிடர் சமுதாயத்திற்காவது சீட்டை வழங்கியிருக்கலாம். ஆனால் திமுக அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளையே சிதம்பரம், விழுப்புரம், திருவள்ளூர், நாகப்பட்டினம் தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டது. 

இது ஒருபுறம் இருக்க உள்ளூர் திமுக பிரமுகர்களுக்கே வேட்பாளர் யாரென்று தெரியாத நிலையில் அதை வேட்பாளர் அறிமுக கூட்டத்திலேயே பேசியது, அதிலும் கடலூர் முன்னாள் எம்எல்ஏ தற்பொழுது மதுராந்தகம் எம்எல்ஏவுமான  இள.புகழேந்தி அவ்வாறு பேசியது திமுக தொண்டர்கள் மட்டுமில்லாமல் கூட்டணி கட்சியினரையும் அதிர்ச்சிக்குள்ளாகுக்கியது.

இதனையெல்லாம் தாண்டி வேட்பாளரின் ஆணவத்தின் வெளிப்பாடு என கூட்டணி கட்சியினர் குமுறுகின்றனர். அதாவது வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர்கள் கூட்டணி கட்சி யின் முக்கிய பிரமுகர்களை வீடு தேடி சென்று ஆதரவு கேட்பதே வழக்கம். ஆனால் கடலூர்  வேட்பாளரோ தனது உதவியாளரை விட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருக்கு போன் செய்து ரோட்டில் வந்து நிற்கும்படி சொன்னதாகவே  தெரிவிக்கின்றனர். இதில் மரியாதை அளிக்கவில்லை என்ற குமுறல் ஒருபுறம் இருந்தாலும் சாதி ரீதியாக விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் வீட்டிற்கு செல்லாதது தான் காரணம் என்று விசிக தொண்டர்கள் ஆவேசமடைகிறார்கள்.

இப்படி திமுக கட்சிக்குள்ளேயே குழிபறிப்பு, பெரும்பான்மை சமூகமான வன்னியர், ஆதிதிராவிடர்கள் சமூகம் புறக்கணிக்கப்பட்டது, கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் அவமான படுத்தப்பட்டது என எல்லா பிரச்சினைகளையும் தாண்டி தேர்தல் பணி எவ்வாறு செய்வது என குழம்பி போயிருக்கின்றனர் திமுக தேர்தல் பணிக்குழு. திமுக கூட்டணி 2004 2009 தேர்தல்களில் கடலூர், சிதம்பரம் தொகுதிகளை கைப்பற்றி வந்த நிலையில்,  கடந்த 2014 இல் கோட்டைவிட்டது. இந்த முறையும் கோட்டைவிட்டுவிடுவோம் போல என்ற தயக்கத்தில் திமுகவினரும் பேசி வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lots of confusion on cuddalore constituency dmk


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->