கார்த்திகை மாதத்தின் சிறப்புகள்..! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை :

கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து நீராடி சிவ, விஷ்ணு பூஜையில் தீப தானம் செய்து வீட்டில் எல்லா இடங்களிலும் தீபங்களை வரிசையாக ஏற்றி வழிபட்டால் குறைவற்ற மகிழ்ச்சி உண்டாகும் என புராணங்கள் கூறுகின்றன.

இந்த மாதத்தில் தான் மகாவிஷ்ணு, பிரம்மா ஆகிய இருவருக்கும் ஜோதி பிழம்பாய், சிவபெருமான் காட்சி அளித்த நாள் கார்த்திகை பௌர்ணமி. கார்த்திகை மாத துவாதசி நாளில் துளசிதேவி மகாவிஷ்ணுவைத் திருமணம் செய்து கொண்டதாக ஐதீகம்.

சபரிமலை ஐயப்பன் :

ஒ‌வ்வொரு வருடமு‌ம் கேரள மா‌நில‌ம் சப‌ரிமலை ஸ்ரீஐய‌ப்ப‌ன் கோவிலி‌ல் கா‌ர்‌த்‌திகை மாத ம‌ண்டல பூஜை வெகு ‌சி‌ற‌ப்பாக நடைபெறு‌ம். தென்‌னி‌ந்‌திய மா‌நில‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து ஏராளமான ப‌க்த‌ர்க‌ள், ஐய‌ப்பனு‌க்கு மாலை அ‌ணி‌ந்து 48 நா‌ட்க‌ள் ‌விரத‌ம் மே‌ற்கொ‌ண்டு சப‌ரிமலை‌க்கு வருவது வழ‌க்க‌ம்.

ப‌க்த‌ர்க‌ள் பெரு‌ம்பாலு‌ம் ஐ‌ப்ப‌சி‌யி‌ல் மாலை அ‌ணி‌ந்து கா‌ர்‌த்‌திகை மாத‌ம் நடைபெறு‌ம் ம‌ண்டல பூஜை‌யி‌ல் ப‌ங்கே‌ற்பா‌ர்க‌ள். அ‌ந்த சமய‌த்‌தி‌ல் ல‌ட்ச‌க்கண‌க்கான ப‌க்த‌ர்க‌ள் சப‌ரிமலை‌க்கு வருவா‌ர்க‌ள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

karthikai month sirappukal


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->