இன்றைய (13.01.19) ராசிபலன்: இன்று, இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டப்போகிறது! - Seithipunal
Seithipunal


மேஷம்:

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். இறை வழிபாட்டில் மனம் ஈடுபடும். பூர்வீக சொத்துகளில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும்.

ரிஷபம்:

பொதுநலச் செயலில் ஈடுபடுபவர்கள் அமைதி காக்கவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் பணியில் நிதானத்துடன் செயல்படவும்.
 
மிதுனம்:

பயணங்களால் எண்ணிய எண்ணம் ஈடேறும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் ஏற்படும். பெற்றோர் பற்றிய கவலைகள் அதிகரிக்கும். நண்பர்களின் மூலம் ஆதாயமான பலன்கள் கிடைக்கும். 

கடகம்:

தாய்மாமன் உறவுகளால் அனுகூலம் உண்டாகும். இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.  

சிம்மம்:

உறவுகளிடம் அமைதிப்போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். சந்திராஷ்டம தினம் என்பதால் நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 
கன்னி:

வழக்குகளில் இழுபறியான நிலை உண்டாகும். உயர் அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். கூட்டாளிகளின் உதவியால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நீர் நிலையம் சம்பந்தப்பட்ட பணியில் இருப்பவர்கள் கவனத்துடன் இருக்கவும். கடன் தொல்லைகளால் மன வருத்தம் ஏற்படலாம். 

துலாம்:

தொழில் சம்பந்தமான முதலீடுகளில் கவனம் வேண்டும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். பணியில் தேவையில்லாத அலைச்சல்களால் விரயம் ஏற்படலாம். 

விருச்சகம்:

பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். மனம் தெளிவு பெறும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். 

தனுசு:

உங்களின் தொழில் திறமையால் மதிப்பு அதிகரிக்கும். மனை சம்பந்தமான விவகாரங்களில் ஆதாயமான சூழல் உண்டாகும். பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். சுபச் செய்திகள் கிடைக்கும். 

மகரம்:

இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். மக்கள் தொடர்பு துறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள். 

கும்பம்:

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.  

மீனம்:

சமூக சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். திருமண வரன்கள் கைக்கூடும். வாகன வசதிகள் மேம்படும். பதவி உயர்வு கிடைக்கும்.
 

English Summary

january 13 rasi palanSeithipunal