இன்றைய (19.02.19) ராசிபலன்: இன்று, இந்த ராசிக்காரர்களுக்கு பணமும், வெற்றியும் குவியப்போகிறது! - Seithipunal
Seithipunal


மேஷம்:

பொதுக்கூட்ட பேச்சுகளால் ஆதரவு கிடைக்கும். மனக்குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். பயணங்களில் இருந்து வந்த இன்னல்கள் நீங்கும். புதுவிதமான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும்.

ரிஷபம்:

தொழில் திறமையால் உங்களின் மதிப்பு உயரும். மனை சம்பந்தமான விவகாரங்களில் இருந்த தாமதங்கள் அகலும். பொருட்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உறவினர்களிடமும், நண்பர்களிடமும் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்:

செய்தொழிலில் புதிய வாய்ப்புகள் உண்டாகும்.  மகான்களின் தரிசனம் மற்றும் ஆசிகள் கிடைக்கும். தந்தைவழி சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். உயர் அதிகாரிகளிடம் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ளவும். சுரங்க பணிகளில் முன்னேற்றமான சூழல் உண்டாகும்.

கடகம்:

அரசாங்க பணிகளில் சாதகமான சூழல் அமையும். வாகனவசதி மேம்படும். உத்தியோகஸ்தரர்கள் பணி தொடர்பான பயணங்களை மேற்கொள்வார்கள். சமூகசேவை செய்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும்.  திருமண வரன்கள் கைகூடும்.  திறமைகளால் பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும்.

சிம்மம்:

புதிய தொழில் முதலீடுகளில் கவனம் வேண்டும். சொந்தங்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும். உறவுகளிடம் அமைதி போக்கினை கையாளவும். எதிர்பாராத செலவுகளால் நெருக்கடியான சூழல் உண்டாகலாம்.

கன்னி:

குடும்ப உறுப்பினர்களை பற்றிய கவலையால் மனசோர்வு உண்டாகும்.  நண்பர்களிடம் வீண் விவாதங்களை தவிர்ப்பது நன்று. கால்நடைகளிடம் கவனத்துடன் செயல்படவும். வழக்கு விவகாரங்களில் இருந்து வந்த இழுபறியான நிலை நீங்கும்.

துலாம்:

இசைக் கலைஞர்களுக்கு திறமைக்கேற்ற முன்னேற்றம் உண்டாகும். மக்கள் தொடர்புதுறையில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். நண்பர்களின் ஆதரவால் தடைபட்ட செயல்கள் நிறைவடையும். தந்தையின் உடல்நலத்தில் கவனம் தேவை. புதிய இலக்கை நிர்ணயம் செய்வீர்கள்.

விருச்சகம்:

பொதுநலச்செயலில் ஈடுபடுபவர்கள் அமைதிப் போக்கினை கையாளவும். புதிய முடிவுகளை எடுக்கும்போது பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்கவும். வாகனப் பயணங்களில் கவனம் வேண்டும். செய்யும் செயல்களில் நிதானத்துடன் செயல்படவும்.

தனுசு:

வாக்குவன்மையால் இலாபம் உண்டாகும். பொருளாதார முன்னேற்றத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் ஆதரவால் சுபிட்சம் உண்டாகும். தம்பதிகளுக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பேச்சுத் திறமையால் அனுகூலம் உண்டாகும். 

மகரம்:

பயணங்களால் எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். உடல் சோர்வால் எடுத்த பணி நிறைவடைய காலதாமதமாகும். சுபச் செய்திகளால் சுப விரயங்கள் உண்டாகும். பெற்றோர்களை பற்றிய கவலைகள் அதிகரிக்கும்.

கும்பம்:

இயந்திரம் சம்பந்தமான பணியில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்படவும். எண்ணிய பணிகளை முடிப்பதில் காலதாமதமும், அலைச்சலும் உண்டாகலாம். உத்தியோகஸ்தரர்கள் பிறரின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடலாம். 

மீனம்:

மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பிறக்கும். வேளாண்மை தொழிலில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சிந்தையின் போக்கில் மாற்றம் உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

february 19 rasi palan


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->