திமுக வேட்பாளரில் வாரிசுகள் 8 பேர் என்று கதைகட்டிவிடுகிறார்கள்! புதுமுக வேட்பாளர்களை அறிவிக்கும் திமுக!  - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் வாரிசுகள் தான் போட்டியிடுகிறர்கள் எனவும், தொண்டர்களுக்கோ, இரண்டாம் கட்ட தலைவர்களுக்கோ இடம் அளிக்கவில்லை என்றும் சமூக வலைத்தளங்களில் கொந்தளிப்பு உருவாகியுள்ளது. 

மேலும் திமுக தொகுதி பங்கீட்டில் பெற்றிருப்பது 20 தொகுதிகள் தான். ஆனால் அவற்றில் 50 சதவீதத்தை கட்சியின் வாரிசுகளுக்கே கொடுக்க முடிவு எடுத்திருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து, இது என்ன ஜனநாயக கட்சியா? குறுநில மன்னர்கள் கட்சியா? என்றும் திமுகவினர் கொந்தளிக்கின்றனர். 

பொதுவாக திமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்கும் போதெல்லாம் ஆளுநர் மாளிகையில், பதவியேற்பிற்கான பட்டியலை நான்கு ஐந்து இடங்களை ஒதுக்கிவிட்டு மற்ற இடங்களை அவர்களே முடிவு செய்துவிடலாம் என்று வாடிக்கையாக கூறுவது வழக்கம். அந்த அளவிற்கு மாவட்ட செயலாளர்கள் குறுநில மன்னர்களாகவே இருக்கும் கட்சி தான் திமுக என்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கூட பிரச்சாரத்தின் போது பேசியுள்ளதாகவும் கூறுவார்கள். 

மாநிலத்தில் தான் அப்படி என்றால் டெல்லி அரசியலிலுமா? உண்மையிலே எட்டு வாரிசுகள் தான் போட்டியிடுகிறார்களா என்று பார்க்கலாமா? அது உண்மைதானா? ஒரு உத்தேச பட்டியலை பார்க்கலாம். 

வடசென்னை தொகுதியில் டாக்டர் கலாநிதி (ஆற்காடு வீராசாமியின் மகன்)

மத்திய சென்னை-  தயாநிதி மாறன் (முரசொலி மாறன் மகன்)

தென்சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன் (தங்கபாண்டியன் மகள், தங்கம் தென்னரசு சகோதரி)

வேலூர் - கதிர் ஆனந்த் (துரைமுருகன் மகன்)

கள்ளக்குறிச்சி – கவுதம சிகாமணி (பொன்முடி மகன்)

பொள்ளாச்சி – கோகுல் (பொங்கலூர் பழனிச்சாமி மருமகன்)

கடலூர் - கதிரவன் (எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மகன்)

தூத்துக்குடி – கனிமொழி (கலைஞர் துணைவி மகள்)

திருவண்ணாமலை - கம்பன் ( எவ வேலு மகன் ) 

சேலம் - பிரபு ( வீரபாண்டியரின் மகன் ) 

வைகோவிற்கு போக மீதி உள்ள ராஜ்யசபா சபரீசன் - ( ஸ்டாலின் மருமகன்) 

இவர்கள் போக, ஆ.ராஜா, டி. ஆர். பாலு, ஜெகத்ரட்சகன், பழனிமாணிக்கம், தாமரைச்செல்வன் போன்ற சீனியர்கள் நிற்கிறார்கள். 

ஆக மொத்தம் 15 தொகுதிகளில் திமுகவின் முன்னாள் முகங்களே வரிசைகட்டி நிற்கிறது. இவர்கள் போக மீதம் உள்ள 5 தொகுதிகளிலும் திமுகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களே நிற்பதாகவும் தகவல் கிடைத்துள்ளது. 

திமுக என்பது திராவிட முன்னேற்ற கழகமா? அல்லது தலைமுறை முன்னேற்ற கழகமா? என்றும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் திமுக புதுமுகங்களை இறக்க உள்ளதாக திமுக தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலே சொன்ன வாரிசுகளும் பலர் புதுமுகங்கள் என்பதால் அவர்களை தான் அப்படி கூறினார்களோ என்றும் விமர்சிக்கிறார்கள். 

8 வாரிசுகள் என்பது கட்டுக்கதை தானே, ஏனெனில் 10 தொகுதிகளில் போட்டியிடுவதாக தான் தகவல் வந்துள்ளது. இதுவும் கட்டுக்கதைதானா இல்லையா என்பதை இன்று மாலை திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிக்கும் போது தான் தெரியும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK NEW FACE CANDIDATES ARE SON OF SENIOR DMK LEADERS


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->