நோ - சீட்டு,  நோ - ஓட்டு, ரெடி ஜூட்டு! ஒரு மாவட்டமே திமுகவில் இருந்து வெளியேற முடிவு?! விறுவிறுப்பான சமாதான முயற்சி!  - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம்  வன்னியர்கள் நிறைந்து வாழும் பகுதி என அனைவருக்குமே தெரியும், இந்த கோட்டையின் இரு பெரும் அரசியல் தலைவர்கள் வீரபாண்டியார் என அடையமொழியோடு அழைக்கபடும் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் வாழப்பாடி ராமமூர்த்தியார். 

இரண்டு பெரும் தலைவர்கள் மறைந்த பின்பு சேலத்தில் வன்னியர்களின் அரசியல் அதிகாரமும் பறிபோய்விட்டன.  திமுகவின் முக்கிய தலைவர், தவிர்க்க முடியாத தலைவர் தான் சேலம் வீரபாண்டியார். முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியை எதிர்த்து பேசும் அளவு தைரியம் வாய்ந்த தலைவர். பாமக நிறுவனர் ராமதாசை எதிர்க்க சொல்லி வீரபாண்டியாரிடம் கலைஞர் சொல்ல, தடலாடியாக நீ என் கட்சிக்கு தலைவன் ,டாக்டர் ராமதாசு என் சாதிக்கு தலைவன், ஒருநாளும் அவரை நான் எதிர்க்க மாட்டேன் என மூஞ்சில் அடித்ததை போல பேசியதாகவும் தகவல்கள் அவ்வப்போது வந்துள்ளது. திராவிட இயக்கத்திலே இருந்தாலும் அரசியல், சமுதாயம் என இரண்டிற்கும் முக்கியத்துவம் கொடுத்து வாழ்ந்தவர். 

தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலினை, வாரிசு தலைவராக அறிவிக்க கூடாது என முதல் எதிர்ப்பை திமுக பொதுகுழுவில் பதிவு செய்தவர் வீரபாண்டியர். அன்று முதலே வீரபாண்டியார் பெயரை கண்டால் ஸ்டாலினுக்கு பிடிக்காது என்ற கதையாகிவிட்டது. அதனை மனதில் வைத்து கொண்டே திமுக தலைவர் இன்று வீரபாண்டியார் குடும்பத்தை திமுகவில் இருந்து ஓரம் கட்டி விட்டார் என்று ஆதங்கப்படுகிறார்கள் அவரது ஆதரவாளர்கள். 

வீரபாண்டியார் மறைவுக்கு பின்பு சேலம் திமுக கலை இழந்து போனது. வன்னியர்கள் அதிகம் உள்ள மாவட்டம், வீரபாண்டியார் கோட்டை என திமுகவினர் புகழும் மாவட்டம். இன்று அந்த வீரபாண்டியார் குடும்பத்தையும் திமுக தலைமை ஒரம்கட்டி விட்டது. இதனால் சேலம் திமுகவில் சலசலப்பு ஏற்பட்டு உள்ளது. நீண்ட காலமாக இந்த பிரச்சனை இருந்து வந்தாலும், தற்போது இது விஸ்வரூபம் எடுத்துள்ளது. 

நடைபெற இருக்கின்ற நாடளுமன்ற தேர்தலில் வீரபாண்டியார் வாரிசுகளான, பிரபு, ராஜா இருவரில் எவரேனும் ஒருவருக்கு சீட் திமுக தலைமை வழங்கும் என வீரபாண்டியார் ஆதரவளார்கள் ஆவலோடு காத்திருந்தினர். ஆனால் திமுக தலைமை அறிவித்த வேட்பளார்கள் பட்டியலில் வீரபாண்டியார் வாரிசுகள் பெயர் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக தேமுதிகவில் இருந்து இரண்டு வருடம் முன் ஓடி வந்த SR பார்த்திபனுக்கு திமுக தலைமை சீட் கொடுத்து வீரபாண்டியார் குடும்பத்தை முற்றிலும் புறகணித்து விட்டது. 

நாடளுமன்ற உறுப்பினருக்கு தான் தகுதி இல்லாது போனாலும் மாவட்ட செயலாளர் பதவிக்கும் கூடவா  இந்த வீரபாண்டியார் வாரிசுகள் தகுதி இழந்து போய்விட்டனரா என வீரபாண்டி ஆறுமுகம் ஆதரவளார்கள், ஸ்டாலின் மீது கடும்கோபத்தில் உள்ளனர். இதனையெல்லாம் தாண்டி சேலம் பிரச்சாரத்திற்கு சென்ற ஸ்டாலினுக்கு வீரபாண்டி ராஜா வணக்கம் வைக்க, ஸ்டாலின் அதனை கண்டும் காணாததும் போல புறக்கணித்தது தான் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது. ஆனால் அதே மேடையில் வாக்குகளுக்காக வீரபாண்டியார் பெயரை உச்சரிக்க ஸ்டாலின் மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

ஆதரவாளர்களின் மனகுமுறல்

சேலத்தில் திமுக என்றால் வீரபாண்டியார் கோட்டை என கெத்தாக சொல்வோம். ஆனால் இப்போது அந்த பெயரை ஓட்டு
வாங்க மட்டுமே தலைமை பயன்படுத்துகிறது. எங்கள் அண்ணன் வீரபாண்டியார் இருந்து இருந்தால் ஸ்டாலின் தலைவர் ஆகி இருக்க முடியுமா? எத்தனை செல்வாக்கு கொண்ட தலைவர் குடும்பத்தை ஏன் திமுக தலைமை ஒதுக்குகிறது என ஆதங்க குரலோடு பேசுகிறார்கள் வீரபாண்டியார் ஆதரவளார்கள். 

திமுக தலைமை தொடர்ந்து வீரபாண்டியார் ஆதரவளார்களையும், குடும்பத்தையும் அவமதித்து வருகிறது. பெயருக்கு நாங்கள்,  பதவிக்கு வேறு ஆளா என கடும்கோபத்தில் உள்ளார்கள், இந்த தேர்தலில் திமுக தலைமைக்கு பாடம் வீரபாண்டியார் மண்ணில் புகுத்தபடும், அதிமுக தலைமைக்கு வீரபாண்டியர் ஆதரவளார்கள் ஓட்டுகளை மாற்றி செலுத்தி பார்த்திபனை தோல்வி அடைய செய்வோம். திமுக தலைமை நல்லமுடிவை எடுக்காத வரை நாங்கள் திமுகவிற்கு உழைக்கமாட்டோம் என கூறினார்கள்.

வீரபாண்டியாரை அவமதிப்பது இங்கே இருக்கும் திமுக வன்னியர்களை அவமதிப்பதற்க்கு சமம், திமுக வன்னியர்களை முக்கிய பொறுப்புகளில் இருந்து ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் என ஒதுக்கிவிட்ட நிலையில் கடலூர், சேலத்தில் தான் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு இருந்தோம், இந்த தேர்தலில் மொத்தமாக அதுவும் போய்விட்டது. எதிர் தரப்பில் வன்னியர்களை நிறுத்தாமல் விட்டால், திமுகவில் வன்னியர்களுக்கு இந்த சீட்கள் கூட கிடைத்திருக்காது.

வயதில் மூத்தவர் செயல்பாட்டில் இருப்பவர் அனைவரும் அறிந்தவர் என்பதால் மட்டுமே  துரைமுருகனுக்கு பொருளாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கும் விரைவில் ஆபத்து வர உள்ளது. இதற்கு மேல் வன்னியர் சமூகம் திமுகவை புறக்கணிக்க வேண்டும் என கூறி வருகின்றனர். மேலும் விரைவில் பாமகவில் இணைய உள்ளோம் எனவும் கூறி முடித்தார்கள். இதனை நோட்டமிட்ட திமுக தலைமை பதறியடித்து வீரபாண்டியார் மகன்களிடம் சமாதான முயற்சியில் உள்ளது. 

கட்டுரை : சக்திவேல். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk avoid veerapandi aarumugam family


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->