பாமக விஷயத்தில் வெளுத்து போன ஸ்டாலினின் சாயம்! போட்டுடைத்த காங்கிரஸ், துயரத்தில் உடன்பிறப்புகள்!  - Seithipunal
Seithipunal


திமுக காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தை டெல்லியில் நடைபெற்று இறுதி கட்டத்தினை எட்டிவிட்டது. 15 தொகுதிகள் வரை காங்கிரஸ் கட்சி கேட்டு வருவதால் திமுக அதற்கு ஒப்புக் கொள்ளாமல் இழுபறியாக சென்று கொண்டிருந்தது. எளிதாக முடியும் எனக் கருதப்பட்ட நிலையில் பேச்சு இழுபறி நிலையில் இருப்பதால் திமுக தரப்பும் பரபரப்பாக இருந்து  வருகிறது. 

கலைஞர் கருணாநிதி இருந்தவரைக்கும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு டெல்லியில் இருந்து பிரதிநிதிகள் திமுகவை தேடி வந்த நிலையில் தற்போது திமுக பிரதிநிதிகள் காங்கிரஸை தேடி சென்று உள்ளனர். இதற்கு முக்கிய காரணம் திமுக தலைவர் ஸ்டாலின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து கூண்டில் சிக்கிய கிளியாக மாட்டிக்கொண்டது தான். இதிலேயே பின்னடைவை சந்தித்த திமுக தற்போது தொகுதி பங்கீட்டில் மிகவும் பின்னடைவை சந்தித்து வருகிறது. 

ஏனெனில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளை கேட்க திமுக தரப்பில் முதலில் ஆறு தொகுதிகள் மேல் இல்லை என்று கூறினாலும், பின்னர் தற்போது 10 தொகுதிகள் வரை இறங்கி வந்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனை உறுதி செய்வதில் திமுகவும், காங்கிரசும் மும்முரமாக ஈடுப்பட்டு வருகிறது. திமுக பிரதிநிதியான கனிமொழி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தையை நடத்தினார். இந்த சந்திப்பின் போது, காங்கிரஸ் கட்சியின் ஆலோசகர் அஹமட் படேல், ப சிதம்பரம், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி ஆகியோர் உடன் இருந்தார்கள். 

டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் நடைபெற்ற கூட்டணி பேச்சு வார்த்தையில் இறுதி முடிவு எடுக்கப்பட்டதாகவும் பேச்சுவார்த்தை முடிவு செய்த கனிமொழி இன்று இரவே சென்னை திரும்புகிறார் எனவும் தகவல்கள் வந்துள்ளது. மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக பாமகவிற்காக காத்திருந்தது வெட்டவெளிச்சமாகியுள்ளது. திமுக பாமகவிற்காக ஒதுக்கி இருந்த இடங்களை எங்களுக்குக் கொடுக்க வேண்டும் என பகிரங்கமாக காங்கிரஸ் வலியுறுத்தியதை அடுத்து இந்த பேச்சு 3 மணி நேரத்திற்கு மேலாக நீடித்துள்ளது. 

இறுதியில் பாமகவிற்காக வைத்திருந்த இடங்களை காங்கிரசுக்கு ஒதுக்குவதற்கு திமுக ஒப்புக் கொண்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கூட்டணி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார். இதிலிருந்து இன்று மதியம் டாக்டர் ராமதாசை கடுமையான சொற்களால் விமர்சித்த மு க ஸ்டாலின் அதே ராமதாசுக்காக காத்திருந்தார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை நினைத்து பாமக மீது விமர்சனங்களை வைத்த திமுக தொண்டர்கள் தான் கொஞ்ச அவசர பட்டுவிட்டோமோ என்று நொந்து போயிள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress want dmk allotted to pmk seats


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->