தில்லையில் திக்குத்தெரியாமல் திருமாவளவன்! வெளியான உண்மை நிலவரம்!  - Seithipunal
Seithipunal


17வது மக்களவைதேர்தல் தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தில் உள்ள  நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான சிதம்பரத்தில் திமுகவின் கூட்டணி கட்சியான விசிகவின் தலைவர்  திருமாவளவன் 5 வது முறையாக போட்டியிடுகிறார். அங்கே என்ன நிலை என்ற விசாரித்ததில் மக்கள் கூறியதாவது, 

தலித் மக்களின் அமைப்பாக பின்னர் கட்சியாக உருவான விசிக சார்பில் திருமாவளவனை 2009 ஆம் ஆண்டு அனைத்து சமூக மக்களும் ஆதரவு கொடுத்து வாக்களித்து  MP ஆக வெற்றிபெறச் செய்தனர். ஆனால் அதற்குப் பிறகு அங்கு வாழும் மக்களிடையே எப்பொழுதும் இல்லாத வகையிலான முட்டல் மோதல்கள் உருவானது.   திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற பல மேடை கூட்டங்களில் அவர் பேசிய பேச்சே கலகத்தை உண்டாக்கியது. அதுவும் அவரின் சரக்கு மிடுக்கு, மற்ற சமூக ஆண்களுக்கு சரக்கு இல்லை என்ற பேச்செல்லாம் மக்களின் மத்தியில் இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. 

இதனை  கவனத்தில் கொண்ட பொதுமக்கள் இனிமேல் எக்காலத்திலும் திருமாவளவன் சிதம்பரத்தில் நிற்ககூடாது என எண்ணி அதற்கடுத்த இரண்டு தேர்தல்களிலும் திருமாவளவனை புறக்கணித்தனர். கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் திருமாவளவனை எதிர்த்து நின்ற அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 

இப்படி ஒரு மோசமான பின்புலத்தை வைத்திருந்தும் சிதம்பரத்தில் மீண்டும் திருமாவளவன் விசிகவின் வேட்பாளராக போட்டியிடுகிறார். தொகுதியின் தலித் இன மக்களே திருமாவளவனை புறக்கணிக்கிறார்கள். இதற்கு காரணம் என்னவென்று கேட்கும் போது, 2009-இல் வெற்றிபெற்ற பிறகு‌ தாழ்த்தப்பட்ட சமூதாயத்திற்காக கல்வி மற்றும் பொருளாதாரத்தில் முன்னேற்ற திட்டம் குறித்து எதையும் திருமாவளவன் பேசவில்லை.  மாறாக தலித் இளைஞர்களை வேறு பாதைக்கு மாற்றிவிட்டதாகவும், சாதி பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும், வெற்று பெருமைக்கு கொடிபிடிக்கும் இளைஞர்களாகவும் பயன்படுத்தி வருவதால் திருமாவளவனுக்கு ஓட்டு போட்டு தலித்களின் எதிர்காலம் அழிந்தது போதும் என கூறுகின்றனர். 

மேலும் சாதிய வேற்றுமை பார்க்கப்பட்ட காலத்தில் கூட பிற சாதியினருடன் நாங்கள் இணக்கமாக தான் இருந்தோம், ஆனால் இன்று திருமாவளவனை பின்பற்றும் இளைஞர்களால் வேற்றுமை அதிகரித்து வேறுபாடு தான் அதிகரித்து உள்ளது. அவர் இங்கே வெற்றி பெற்றால் எங்கள் சமுதாயம் மற்ற சமுதாயங்களால் பிரித்து பார்க்கும் நிலை அதிகமாகும் எனவும் அச்சப்படுகின்றனர். 

இதனையெல்லாம் தாண்டி அவரை நாங்கள் வெற்றி பெற வைத்தாலும், சிதம்பரம் பகுதியை தாண்டி வேறு எங்கும் திருமாவளவனை பிரச்சாரம் கூட செய்ய விடாமல் பல நெருக்கடிகளை திணித்துள்ள திமுகவின் ஸ்டாலின்  என்ன அதிகார பகிர்வை கொடுத்துவிட போகிறார் என்ற கேள்வியையும் வைக்கிறார்கள். இதனையெல்லாம் தாண்டி வேதனையளிக்கும் விதமாக விழுப்புரம் தனி தொகுதியில் விசிக வின் பொதுச் செயலாளரை திமுகவின் சின்னத்தில் வேட்பாளராக நிற்க வைக்க, திமுகவின் அடிப்படை உறுப்பினராகவும் இணைத்துக்கொண்டு அடக்குமுறைகளை வைத்துள்ளது திமுக. எங்கள் இளைஞர்களை  அடங்கமறு, அத்துமீறு என கூறும் திருமாவளவன் திமுகவின் அடுக்குமுறைக்கு எதிராக அவரே எதுவுமே செய்ய முடியாத நிலையில், எங்களுக்கு எப்படி பேசுவார் எனவும் கேட்காமல் இல்லை. 

தன் சாதி மக்களின் ஆதரவோ இப்படி இருக்க மற்ற சமூக மக்களோ முற்றிலும் திருமாவளவனை வெறுக்கின்றனர். ஏனென்றால் பல மேடைகளில் மாற்று சமுதாயப் பெண்களை இழிவாகவும், சரக்கும் மிடுக்கும் எங்களிடமே உள்ளது என வசனங்களையும் பேசியது அவருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் கூறுகின்றனர். கூட்டணி கட்சியாகவே இருந்தாலும் திருமாவளவனுக்கு மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் என்று தான் பரவலாக பேச்சும் அடிபடுகிறது. 

இதனையெல்லம் தாங்கி கொண்டிருக்கும் திருமாவளவன், சிதம்பரத்திற்கு பதில் விழுப்புரத்தை தேர்ந்தெடுத்திருக்கலாமோ என்றும் புலம்பி வருகிறாராம். தலித் மக்களின்  வாக்குகளை பெறவே விடுதலை சிறுத்தைகள் கட்சியை திமுக தங்கள் கூட்டணியில் வைத்துள்ளது. ஆனால் திமுகவில் 63 மாவட்ட செயலாளர்களில் ஒரே ஒருவர் தான் தலித் என்பதையும் அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 

இதனையெல்லாம் தாண்டி, திமுகவினர் சிலரிடம் கேட்டதில், பிற சமுதாயங்கள் மட்டுமே வசிக்கும் ஊர்களுக்கு திருமாவளவனை நாங்கள் அழைப்பதும் இல்லை, அவர் வர விரும்பவும் இல்லை, மீறி வந்தால் விழக்கூடிய வாக்குகளும் விழாது என எச்சரிக்கை செய்து வைத்துள்ளார்களாம். பல கிராமங்களுக்கு பிரச்சாரத்திற்கே செல்ல முடியாத நிலையில் இருக்கும் வேட்பாளர் திருமாவளவன் தான் என்றும் கூறுகிறார்கள். 

இதனையெல்லம் தாண்டி, பிரச்சார மேடைகளில் கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள தவாக, மூமுக போன்ற கட்சிகளின் கொடிகள் கூட பட்டொளி வீசி பார்க்கிறது, இரண்டு தொகுதியில் போட்டியிடும் விசிக கொடியோ அக்கட்சி தொண்டர்கள் கையில் மட்டும் தான் பறக்கிறது. தொகுதியில் உள்ள இஸ்லாமிய மக்களின் வாக்குகள் அவருக்கு வலு சேர்க்கும் என எதிர்பார்க்கபடுகிறது. இதனையெல்லாம் தாண்டி சிதம்பரம் தொகுதியில் திருமாவளவன் கரையேறுவது என்பது சிரமம் தான் என்றாலும், மக்களின் வாக்கு என்ன சொல்கிறது என்பதனை மே 23 வரை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

chidambaram vck candidate thirumavalvan


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->