மாணவ - மாணவிகள் நன்றாக படிக்க சில வழிமுறைகள்! - Seithipunal
Seithipunal


ஒரு பாடத்தை தொடங்கும் முன் திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். அதில் முழு கவனத்தையும் செலுத்தும் வகையில் அதற்கான நேரத்தை தீர்மானித்துக்கொள்ளுங்கள். படிப்பதையும், செயல்முறை பயிற்சிகள் செய்வதையும் அவ்வப்போதே செய்து முடித்துவிடுங்கள். பிறகு செய்யலாம் என்று ஒத்திப் போடாதீர்கள்.

உங்களுக்காக சில பயனுள்ள குறிப்புகள் :

படிக்கப் போகும் பாடம் முழுவதையும் மேலோட்டமாக வாசிக்க வேண்டும். தலைப்புகளுக்கும் துணைத் தலைப்புகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதனால் இப்பாடம் எதைப் பற்றியது என்பது விளங்கும்.

வாசித்தல் :

பொருள் புரியும்படி கவனமாக வாசிக்க வேண்டும். படித்தவற்றை நமக்கு ஏற்கெனவே தெரிந்தவற்றோடு தொடர்புப்படுத்தி உதாரணத்தோடு படிக்க வேண்டும். புத்தகத்தில் அதிகமாக அடிக்கோடு போடுவதை தவிர்க்க வேண்டும். மிகவும் முக்கியமான வார்த்தைகளை மட்டும் அடிக்கோடிடலாம்.

சொல்லிப் பார்த்தல் :

வாசித்து முடித்தபிறகு, முக்கியமானவற்றை நினைவுக்குக் கொண்டு வந்து சொல்லிப் பார்க்க வேண்டும். இது படித்தவற்றை நினைவில் நிறுத்திக்கொள்ள மிகச் சிறந்த வழியாகும்.

உங்களுக்கு நீங்களே கேள்வி கேட்டு கொள்ள வேண்டும்?

பாடச் சுருக்கத்தை வாசித்த பிறகு, பாடத்திலுள்ள தலைப்புகள் அனைத்தையும் கேள்விகளாக மாற்றி நமக்குள் நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் அதைத் தெரிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.

எதற்காக இதைப் படிக்கிறோம்? அதனால் என்ன பயன்? என்பதை அறிந்து கொள்வதற்கான ஆர்வம் அதிகரிக்கும்.

மாதிரித் தேர்வு :

பாடம் முழுவதையும் படித்து முடித்த பிறகு மாதிரித் தேர்வு எழுதிப் பார்க்க வேண்டும். ஒருமுறை முதலிலிருந்து அனைத்தையும் திரும்பப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு தலைப்பும் எவ்வாறு மற்றவற்றுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துக்கொள்ள வேண்டும்.

நினைவாற்றலுடன் இருக்க செய்ய வேண்டியவை :

ஒரு விஷயத்தை சாதாரணமாக ஞாபகம் வைத்து கொள்வதைவிட, சில குறிப்புகளால் மனதில் வைத்துக்கொண்டால் அவை எளிதில் மறக்காது. உதாரணமாக வண்ணம், ஓசை மற்றும் எழுத்துகள் போன்றவற்றை ஞாபகம் வைத்துக் கொள்ளலாம்.

எளிய உடற்பயிற்சியில் ஈடுபடுவதாலும் ஞாபக சக்தி அதிகரிக்கும். தினமும் நடைப்பயிற்சி, நீச்சல் மற்றும் விளையாட்டுகளில் ஈடுபட்டால் புத்துணர்ச்சியுடன் செயல்பட முடியும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

student exam reading


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->