இந்தியன் நேவியில் சேர ஓர் அறிய வாய்ப்பு! மிஸ் பண்ணிடாதீங்க!! உடனே விண்ணப்பியுங்கள்!! - Seithipunal
Seithipunal


இந்திய கடலோர காவல்படையில் பணி  புரிய பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. 

பல இளைஞர்களின் கனவு இந்தியன் நேவியில் சேர்ந்து பணியாற்றுவது தான். அதற்கான வாய்ப்பு தற்போது வந்துள்ளது. அதாவது, Navik (General duty) பணிக்கான அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. இதற்கு தகுதியும், திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி : Navik (General duty) 

விண்ணப்பிப்பது எப்படி: 21 ஜனவரி முதல் 31 ஜனவரி மாலை 05.00 மணிக்குள் www.joinindiancoastguard.gov.in என்ற இணைய பக்கத்திற்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். 

தேர்வு நடைபெறும் நாள்:  மார்ச் / ஏப்ரல் - 2019. 

கல்வித்தகுதி : பனிரெண்டாம் வகுப்பில் கணிதம் மற்றும் இயற்பியலை பாடமாக கொண்டு, குறைந்தபட்சமாக 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 

வயது : 18 - 22  /  01.08.1997 முதல் 31.07.2001 க்குள் பிறந்தவராக இருத்தல் வேண்டும். 

வயது சலுகை : எஸ்.சி / எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயதில் தளர்வு உண்டு. 

மருத்துவ தகுதிகள் :

* குறைந்தபட்சம் 157 செ.மீ உயரம் இருக்க வேண்டும்.
* மார்பளவு இயல்பாக 5 செ.மீ விரியும் திறனும் வேண்டும்.
* வயதிற்கேற்ற உடல் எடை சரிவிகித அளவு. +-10% ஏற்றுக்கொள்ளப்படும்.
* கேட்கும் திறன் இயல்பான அளவு இருத்தல் வேண்டும்.
* கண்பார்வை பொறுத்தவரையில் சிறந்த கண் எனில் 6/6, மோசமான கண் எனில் 6/9 இருக்க வேண்டும். கண்டிப்பாக கண்ணாடி அணிந்திருக்கக் கூடாது.
* உடம்பில் எந்த பகுதியிலும் பச்சைக்குத்தி இருக்கக்கூடாது.

தேர்வு செய்யப்படும் முறை: 

மூன்று கட்ட தேர்வு முறைகள் உண்டு. ழுத்து தேர்வு, உடல் மற்றும் உடற்பயிற்சி சோதனை தேர்வு. இறுதியில் மருத்துவ பரிசோதனை  என 3 கட்டமாக தேர்வு நடைபெறும். 

சம்பளம் : தொடக்க ஊதியமாக ரூ.21,700 ரூபாய் வழங்கப்படும். அத்துடன் கூடுதல் மதிப்பீட்டு உதவித் தொகைகளும் உண்டு.
 
மேலும் விரிவான தகவல்களுக்கு http://www.davp.nic.in/WriteReadData/ADS/eng_10119_37_1819b.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

JOIN INDIAN COAST GUARD JOB


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->