கேள்விக்குறியாகிய பொதுத்தேர்வு எழுதும் தனியார் பள்ளி மாணவர்களின் எதிர்காலம்!! பறந்த நோட்டீஸால் அதிர்ச்சியில் பள்ளிகள்!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு தனியார் பள்ளியும், ஆண்டுக்கு ஒருமுறை பள்ளிக்கல்வித்துறையின் அறிவுறுத்தலில் படி உரிமங்களை புதுப்பிக்க வேண்டியது அவசியம். 

ஆனால், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள, 68 பள்ளிகள் நடப்பு கல்வியாண்டில் உரிமங்களை புதுப்பிக்காமல் இருந்தன. அவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நோட்டிஸ் அனுப்பி வைக்கப்பட்டு இறுதி தேர்வு தொடங்குவதற்குள் ஆவணங்களை சமர்பிக்குமாறு உத்தரவு பறந்தது.

இதன்படி, 8 பள்ளிகள் உரிமங்களை புதுப்பித்துக் கொண்டன. ஆனால், 52 உயர்நிலை பள்ளிகள்  இன்றும் புதுப்பிக்கப்படவில்லை. இதில், 6 தொடக்கப்பள்ளிகள் அடக்கம். 

இதனைத்தொடர்ந்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் அந்த பள்ளி நிர்வாகிகளை அழைத்து  கூட்டம் நடைபெற்றது. தங்கள் பள்ளியின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்ற விபரம் அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு தெரியவில்லை. 

இவ்வாறு புதுப்பிக்கப்படாமல் இருந்தால், அப்பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் கிடைக்காது. எனவே, மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு தேர்வு வருவதற்குள் உரிமங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும். 

குறிப்பாக, 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி உரிய ஆவணங்களை சமர்பிக்க வேண்டும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது. உடனடியாக அங்கீகாரம் பெறுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். இல்லையெனில் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும், அந்த பள்ளிகளை மூடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு மாணவர்களின் எதிர்காலம் குறித்து சிறிதும் அக்கறை, கவனமின்மை இல்லாமல் இயங்கும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இந்த விஷயம் தெரியாமல் உள்ளது. 

பள்ளிக்கல்வியில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டால் அது அவர்களின் வாழ்வை எவ்வளவு பாதிக்கும்? தேர்வுக்கு இன்னும் சிறிது காலமே இருக்கும் பட்சத்தில் பள்ளிகள் இப்படி பொறுப்பற்று இருப்பது முறைதானா? 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dindukkal private school will ban


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->