தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் நூதன வழிபடு! - Seithipunal
Seithipunal


தஞ்சை பெரிய கோயிலில் தரைத்தளத்தை புதுப்பிப்பதற்காக பெயர்த்தெடுத்த பழைய கற்களை கொண்டு பக்தர்கள் நூதன வழிபாடு. 

ராஜராஜ சோழன் உலகிற்கு விட்டுச்சென்ற மிகப்பெரிய சொத்து "தஞ்சை பெரிய கோவில்" தான். இந்த கோயில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. உலகில் உள்ள சிவாலயங்களுக்கு மகுடமாக இந்த கோவில் திகழ்ந்து வருகின்றது.

 

இந்த கோயிலுக்கு தினம்தோறும் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். இந்த கோயிலுக்கு வரும் வருடம் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான பல லட்சம் ரூபாய் செலவில் புதுப்பிக்கும் பணியும் தொடங்கினர். இதற்காக கோயிலின் சுற்று பிரகார தரைகளில் புதிய கற்களை பதிப்பதற்காக பழைய கற்களை அகற்றும் பணி தற்போது நடைபெற்று வந்தது. 

இந்நிலையில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் கடந்த சில தினங்களாக நூதன வழிபாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். பிரகாரத்தின் தரையில் இருந்து பெயர்த்து எடுத்து வைக்கப்பட்டுள்ள கற்களை ஒன்றின்மேல் ஒன்றாக அடுக்கி வைத்து இந்த நூதன வழிபாட்டை செய்து வருகிறார்கள். 

வீடு கட்டுவது உள்ளிட்ட தங்களின் வெவ்வேறு பிரார்த்தனைகளை கோரிக்கைகளாக முன்வைத்து பக்தர்கள் இந்த வழிபாட்டில் இறங்கியுள்ளனர். ராஜராஜன் கட்டிய இந்த கோயிலின் கற்களை கொண்டு வழிபாடு செய்தால் தாங்களும் சொந்தமாக வீடு கட்டுவோம் என நம்பிக்கையில் இதனை செய்வதாக பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tanjavur big temple the devotees worship


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->