இந்த மூன்று கோயில்களின் கட்டிடக் கலையை பின் பற்றித் தான்... ராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலைக் காட்டியுள்ளார்.! - Seithipunal
Seithipunal


முற்காலச் சோழ மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொடும்பாளுரில் மூவர் கோயில் இருந்தது. தற்போது, கால வெள்ளத்தில், அதில் இரண்டு கோயில்கள் மட்டுமே, காணக் கிடைக்கின்றன.
    
மற்றொரு கோயில் முற்றிலுமாகச் சிதைந்து விட்டது. இதன் அடித்தளப் பகுதிகள் மட்டும், இன்னும் மிச்சம் இருக்கின்றன. இந்தக் கோயில் வளாகத்தில் உள்ள தமிழ் கிரந்தக் கல்வெட்டு, கொடும்பாளுரில் இருந்த வேளிர்கள் பற்றியும், தொடர்ந்து வந்த, அவர்களது வம்சாவழிச் செய்திகளைக் குறிப்பிடுகிறது.
    
ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு இது. கி.பி.10-ஆம் நுாற்றாண்டில், இந்தக் கல்வெட்டு செதுக்கப் பட்டுள்ளது. சிதைந்து போய் இருக்கும் இந்தக் கல்வெட்டில், பூதி விக்ரம கேசரி என்பவன், இந்தக் கோயிலைக் கட்டி உள்ள செய்தியைக் குறிப்பிடுகிறது.
    
இந்த விக்ரம கேசரிக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். கற்றளை பிராட்டியார், வரகுணா என்பன அவர்களது பெயர்கள். இந்த இரண்டு மனைவியரின் பெயரிலும், தனது பெயரிலுமாகச் சேர்த்து, மொத்தமாக, மூன்று கோயில்களை இம்மன்னன் எழுப்பி உள்ளான்.

    
இந்த மூன்று கோயில்களின் கட்டிடக் கலைப் பாணியைப் பின் பற்றித் தான், பின்னாளில், ராஜராஜ சோழன், தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டி உள்ளான்.
    
மேலும், கொடும்பாளுரில் தங்கி இருந்த, காளமுகர்களுக்கு, தினமும் உணவளிக்க, பல கிராமங்களை விக்ரம கேசரி தானமாகத் தந்துள்ளான்.
    
இந்த காளமுகர்கள் வித்தியாசமானவர்கள். தங்களை, மனிதர்களுக்கும், ராட்சசர்களுக்கும் பிறந்தவர்கள், என்று சொல்லிக் கொண்டார்கள். சுடுகாட்டுச் சாம்பலை உடல் எங்கும் பூசிக் கொண்டார்கள். தண்ணீர் குடிப்பதற்கு கூட, மண்டை ஓட்டையே பயன் படுத்தினர்.
    
சிவபெருமானுக்கு கள்ளைப் படையல் வைத்து வழிபாடு செய்தார்கள். கொடும்பளுர் வேளிர்கள் கொங்கு நாட்டினரிடம் கொண்டிருந்த அரசியல் காரணங்களுக்காக, காளமுகர்கள், கொடும்பாளுரில் தங்கி இருந்தனர். இந்த காளமுகர்கள் கர்நாடகாவில் அதிகம் வசித்து வந்தனர். 
    
நீண்ட சடை முடியும், ஒரு கையில் தடியும், மற்றொரு கையில், மண்டை ஓடும் வைத்திருந்த இவர்கள், அந்தக் காலத்தில் மற்ற மனிதர்களிடமிருந்து, தங்களை வித்தியாசப் படுத்திக் கொள்வதற்காக, இவ்விதம் தோற்றத்தை மாற்றிக் கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajaraja solan has shown a great temple in tanjore


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->