பொங்கலை முன்னிட்டு குளு குளு மண்பானைகள் தயாரிப்பு!! தொடர்ந்து வரும் ஆர்டர்களால் பெரம்பலூர் வியாபாரிகள் மகிழ்ச்சி!! - Seithipunal
Seithipunal


தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கலுக்கு இன்னும் சிறிது நாட்களே இருக்கின்றது. தை பொங்கல் எனப்படும் தை மாதம் முதல் தேதியில் சூரியபகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவார்கள். இதனை பெரம்பலூர், கடலூர் மற்றும் அரியலூர் போன்ற தமிழகத்தின் நடுப்பகுதியில் உள்ள மக்கள் சூரிய பொங்கல் என்றே பெரும்பாலும் அழைப்பார்கள். 

மேலும், பொங்கல் சீர்வரிசை மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்றாகும் இதற்காக சில நாட்களுக்கு முன்பே, பெரம்பலூர் மற்றும் அரியலூர் பகுதிகளில் உள்ள மக்கள், வாழை பழத்திற்கு பேர்போன திருவையாறு மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளுக்கு சென்று மாட்டு வண்டிகளில் வாழை தார்களை ஏற்றி வந்து வீட்டில் வைத்து பழமாக்கி அதனை பொங்கல் சீர்வரிசைகளுக்கு உபயோகிப்பார்கள். 

அனைத்து குடும்பங்களிலும் மண்பானையில் பொங்கலிட்டு படைப்பது தமிழர்களின் பாரம்பரிய வழக்கமாகும். மேலும், புதுமண தம்பதிகள் மற்றும் சகோதரி குடும்பங்களுக்கு சீர்வரிசையுடன் மண்பானைகளை சேர்த்து வழங்குவது மரபாகும். 

இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம், பாளையம், செட்டிகுளம், சிறுவாச்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பானைகள் தயாரிப்பு பணி மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கின்றது. இங்கு சிறிய மற்றும் பெரிய அளவிலான பானைகள் தயாரிக்கப்படுகிறது. 

தயாரித்து முடிக்கப்பட்ட பானைகள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் காட்சி காண்பதற்கே மிகவும் அருமையாக உள்ளது. மேலும், பொங்கல் பானையை வைத்து பொங்கலிட மண் அடுப்புக்களும் தயாரித்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த பெரம்பலூர் மாவட்ட பகுதிகளில் செய்யப்படும் பானைகளை வாங்க, வட ஆற்காடு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் நேரடியாக இங்கு வருகை புரிவது வழக்கமாகும். சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு பணிகளின் விலை சற்று கூடுதலாக இருக்குமென்று எதிர்பார்க்கபடுகிறது. 

தேங்காய் மட்டை, களிமண், போன்ற இடுபொருட்களின் விலையேற்றமே இதற்கு காரணம், இந்த பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில், 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஆனால், அவர்களுக்கு போதுமான வருமானம் கிடைப்பதில்லை. 

எனவே, இவர்களுக்கு அடுத்த தலைமுறையினர் இந்த மண்பாண்ட தொழில் புரிய ஆர்வம் காட்டவில்லையாம். இதனால் வரும் காலங்களில் இந்த தொழில் காணாமல் போகலாம் என்கின்றனர் அப்பகுதி மக்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

production for clay pot from perambalur


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->