பொன்.மாணிக்கவேலின் அடுத்த அதிரடி!! 2000 விக்கிரகங்களை குறித்து வெளியிட்ட தகவல்!!  - Seithipunal
Seithipunal


இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சமேத குலசேகரமுடையார் கோவில் அம்பை அருகே உள்ள கல்லிடைக்குறிச்சியில் உள்ளது. 1982 ஆம் ஆண்டு இந்த கோவிலில் நடராஜர், சிவகாமி அம்பாள், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு சிலைகள் திருட்டு போனது.

காணாமல் போன சிலைகள் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், திருடுபோன நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்கவேல், கல்லிடைக்குறிச்சி கலந்து குலசேகரமுடையார் கோவிலை ஆராய்ச்சி செய்து அங்கிருந்த நிர்வாகிகளிடம் கோவில் நிலவரம் பற்றி கேட்டறிந்தார். 

Image result for பொன்.மாணிக்கவேல் seithipunal

கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்திய பொன்மாணிக்கவேல் பின்னர் சுப்ரமணியர் கோவிலுக்கு சென்று 17 விக்கிரகங்களை பார்வையிட்டு, அதன் பின்னர் நிருபர்களிடம், "இந்த கோவிலில் இருந்து நான்கு சிலைகள் திருடு போயுள்ளது என்றும், 

இந்த சிலைகள் தென் ஆப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. விரைவில் அதை மீட்போம். அவற்றை மீண்டும் இக்கோவிலில் வைத்து வழிபட அனுமதிக்க வேண்டும். 17 விக்கிரகங்கள் பாதுகாப்பு கருதி இப்பகுதியில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைக்கப்பட்டுள்ளன.

கோவிலுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் பேசி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தஞ்சாவூரில் அருங்காட்சியகத்தில் 2000 சிலைகள் உள்ளது அதனையும், அந்த கோவிலில் வைத்து வழிபட அரசு உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pon manikavel says about statue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->