உலக அளவில் உச்சம் பெற்ற தமிழ் பண்பாடு..மிரண்டு போன வெளிநாட்டினர் - அசர செய்த தமிழகத்தின் ஆன்மீக ஸ்தலம்.! - Seithipunal
Seithipunal


விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி மலைக்கு செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிந்தனர்.

திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மற்றும் சந்தன மகாலிங்கம் சுவாமி கோயில்கள் உள்ளன.

இங்கு அரிய வகை மூலிகைகள் ஏராளமாய் உள்ளன. இக்கோயில் பகுதியானது வனத்துறை யினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு பக்தர்கள் தரிசனம் செய்ய பௌர்ணமி, அமாவாசை, பிரதோசம் உள்ளிட்ட முக்கிய தினங்களில் மட்டுமே அனுமதி உண்டு.

இந்நிலையில் ஐரோப்பிய செக் குடியரசு நாட்டிலிருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள், தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்கள் மற்றும் சுற்றுலா தலங்களை பார்த்து வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் பிரத்யேகமான 31 ஆட்டோக்களில் சென்னையிலிருந்து வந்துள்ளனர். இதையடுத்து, சதுரகிரி மலைக்கு செல்ல சிறப்பு அனுமதி பெற்று தாணிப்பாறை பகுதிக்கு வந்தனர்.

பின்பு, வனத்துறையினர் அவர்களிடம் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வனப் பகுதிக்குள் பிளாஸ்டிக், மது, சிகரெட், தீப்பெட்டி உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருள்கள் உள்ளதா? என தீவிர சோதனை நடத்தினர்.

பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் மலை கோயிலுக்கு புறப்பட்டுச் சென்றனர். அப்போது அவர்கள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் பல்வேறு கோயில்களுக்கு சென்று வருகிறோம். மேலும், இந்தியாவில் உள்ள ஆன்மீக முறைகள் தங்களுக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும், இந்த முறை சதுரகிரி வந்ததாகவும் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

other country pilgrims trekking sathuragiri


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->