சேலம், ஆத்தூர் அருகே நாகியம்பட்டியில் விமரிசையாக நடந்த ஜல்லிக்கட்டு!! ஆட்சியர் ரோகினி துவங்கி வைத்தார்!! - Seithipunal
Seithipunal


பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல பகுதிகளில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற்று வருகிறது. தைத்திருநாள் முதல் மதுரையில் துவங்கி அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் என மூன்று நாட்களும் முறையே நடைபெற்று களைகட்டியது.

இதனைத்தொடர்ந்து தற்பொழுது, சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தம்மம்பட்டி, கூலமேடு, நாகியம்பட்டி ஆகிய பகுதிகள் உள்ளன. அங்கு வருடந்தோறும் ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இது மிகவும், பிரசித்தி பெற்ற ஜல்லிக்கட்டு ஆகும். இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாட்டை விழாக்குழுவினர், காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் விரிவாக செய்திருந்தனர். 

18 ம் தேதி கூலமேடு ஜல்லிக்கட்டு நடந்து முடிந்த நிலையில் நேற்று (ஜனவரி 21) நாகியம்பட்டி தோப்புமண்டி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதனை மாவட்ட ஆட்சியர் ரோகிணி கொடியசைத்து துவக்கிவைத்தார். இந்நிகழ்வில், கள்ளக்குறிச்சி எம்பி, மருதமுத்து எம்எல்ஏ, போன்றோர் கலந்து கொண்டனர்.

மாவட்ட எஸ்பி தீபா கணிகர், ஆர்டிஓ செல்வன் ஆகியோர் முன்னிலையில் வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதில், சேலம், நாமக்கல், கரூர், அரியலூர், துறையூர் பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. இந்த காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது பின்னர் ஜல்லிக்கட்டு துவங்கியது.

இதில் 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் செயல்பட்ட விழாக்கமிட்டி, காயம் அடையும் வீரர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு வசதியாக ஆம்புலன்ஸ்  மற்றும் காளைகளுக்கு சிகிச்சை அளிக்க கால்நடை மருத்துவர்களும் ஏற்பாடு செய்திருந்தனர். 

போட்டியில் வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் காளையர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது. இதனை பல்வேறு பகுதியை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டு ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

jallikkattu in attur nakiyampatti


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->