18 புராணங்கள் என்னென்ன தெரியுமா..! ஆச்சரியமூட்டும் அறிய தகவல்கள்..!! - Seithipunal
Seithipunal


புராணம் தோன்றிய புராணம்….

புராணம் என்பது எப்போதுமே, கடவுள் சார்ந்ததாகவே இருந்தன. பிற்காலச் சோழர்களின் ஆட்சிக் காலத்திற்குப் பின், சைவம் தொடர்பான புராணங்களும், ஸ்தல புராணங்களும் அதிக அளவில் தோன்றின.

இந்தப் புராணங்கள் எல்லாம் வட இந்தியாவில் இருந்து வந்தவை, என்ற கூற்று பலமாகவே இருக்கிறது. ராமாயணம், மஹாபாரதம் போன்ற இலக்கியங்கள், வட இந்தியாவில் இருந்து வந்தவை தான்.

அவை மொழி மாற்றம் செய்யப்பட்டு, உலகமெங்கும் பரவின. இன்றும், இந்த புராணங்கள் வெவ்வேறு ரூபங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.

சங்க காலம் முடிந்த நிலையில், களப்பிரர்களின் ஆட்சிக் காலத்தில், பக்தி இயக்கங்கள், முற்றிலும் செயல் இழந்திருந்தன.

ஆனால், களப்பிரர்களின் காலம் முடிந்தவுடன், பக்தி இயக்கம் நன்றாக வளர்ச்சி அடைந்தது. ஆன்மீகம் சார்ந்த பல இயக்கங்கள், வட நாட்டுக் கதைகளை, மக்களின் முன்பாக காலட்சேபம் செய்யத் துவங்கினர். இப்படித் தான், புராணம் கால் ஊன்றத் துவங்கியது.

துவக்க காலத்தில், இந்தப் புராணம் என்பது, 18 புராணங்களை மட்டுமே குறித்தது. மச்ச புராணம், கூர்ம புராணம், பாகவதம், இலிங்க புராணம் போன்ற புராணத் தழுவல்களும், ஸ்தல புராணங்களாக, திருவிளையாடல் புராணம், காஞ்சி புராணம், அருணாசல புராணம், திருக்கழுக்குன்ற புராணம், சீகாளத்தி புராணம், குற்றாலத் தலப் புராணம், சேது புராணம் போன்றவையும் தோன்றின.

தல புராணங்களில் மிகவும் புகழ் பெற்றது, மதுரை திருவிளையாடல் புராணம். இந்தப் புராணத்திற்கான பாடல்களை, வேம்பத்துாரான், பெரும்பற்றப்புலியூர் நம்பி, பரஞ்சோதி ஆகியோர் பாடி உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do You Know 18 puranangal.. New Information


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->