தமிழ்நாட்டையே தெறிக்கவிடும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!! - Seithipunal
Seithipunal


அனைத்து தமிழ்குடும்பங்களும் ஒன்று சேர்ந்து கொண்டாடும் பொங்கல் திருநாளில் சூரிய பொங்கலை முன்னிட்டு  இன்று  சூரியனுக்கு பொங்கல் வைத்து படைப்பது வழக்கம். இதனை தொடர்ந்து தற்பொழுது அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற்று கொண்டிருக்கிறது.

இந்த மதுரை மாவட்ட அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மிகவும் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு ஆகும். இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வினை மதுரை மாவட்ட கலெக்டர்  நடராஜன் கொடியசைத்து துவங்கி வைத்தார்.  இதில் 500 மாடுபிடி வீரர்களும், 636 காளைகளும், பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் விழா துவங்கும் முன்னரே உறுதிமொழி ஏற்று கொண்டனர். 

இந்த ஜல்லிக்கட்டு காளைகளை தழுவி வெற்றி காண ஒவ்வொரு சுற்றிற்கும்  சுமார் 75 வீரர்கள் கலந்து கொள்கின்றனர். வெற்றி பெரும் காளைகளின் உரிமையாளர்கள் மற்றும் வீரர்களுக்கு சம்பவ இடத்திலேயே பரிசுகள் வழங்கப்படுகின்றது. குக்கர், வெள்ளி நாணயங்கள், தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள் என வெற்றியின் தகுதிக்கேற்ப பரிசுகள் வழங்கப்படுகிறது. 

5 அவசர உதவி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சுமார் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில இருக்கின்றனர். அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டு ஜல்லிக்கட்டு துவங்கியது.

பார்வையாளர்களுக்கு ஏற்றவாறு வேலிகள் அமைத்து வெளியில் நிற்கவைக்கபட்ட நிலையில் கண்டு மகிழ்கின்றனர். மேலும், மாடுபிடி வீரர்களும், மாடுகளும் மருத்துவப்பரிசோதனை முடிந்த பிறகே தகுதியானவர்களாக களத்தில் இறக்கப்படுகின்றனர். மேலும், அடிபடாமல் இருக்க களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது.

மதுரை முழுவதும் பிரச்சனைகளோ, பரபரப்பு சம்பவங்களோ ஏறபடாத வண்ணம் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

avaniyapuram jallikattu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->