முள் படுக்கையில் படுத்தவாறு, அருள் வாக்கு சொல்லும் பெண் சாமியார்….! - Seithipunal
Seithipunal


 

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள லாடனேந்தல் என்ற ஊரில், பூங்காவனம் முத்துமாரியம்மன் மாசாணி அம்மன் கோவில் உள்ளது.

இந்தக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதத்தில் திருவிழா நடைபெறும். தற்போது 40-வது ஆண்டாக, இந்தக் கோவிலில் இந்தத் திருவிழா நடைபெறுகிறது.

இந்த திருவிழாவின் ஹைலைட்டான விஷயம், இந்த விழாவின் போது, ஒரு பெண் சாமியார், முள் படுக்கையில் அமர்ந்து கொண்டும், படுத்துக் கொண்டும், நடந்து கொண்டும் அருள் வாக்கு கூறுவார். அந்த அருள் வாக்கைக் கேட்க ஆயிரக் கணக்கில் மக்கள் கூடுவர்.

அவர் பெயர் நாகராணி. இவர் இந்த முள் படுக்கை, அருள் வாக்கிற்காக, 48 நாட்கள் விரதம் இருந்து, அருள் வாக்கு கூறுகிறார்.

இவர் அருள் வாக்கு கூறுவதற்காக, கருவேலம் முள், இலந்தை முள், கற்றாலை உள்ளிட்ட 11 வகையான முட்கள் அடங்கிய படுக்கை அமைக்கப் படுகிறது. அதில் இவர், சாதாரணமாக நடப்பார். அமர்ந்து கொள்வார். படுத்துக்  கொள்வார்.

அந்த தருணத்தில், பக்தர்களுக்கு, அருள் வாக்கு வழங்குகிறார். இவர் கூறும் அருள் வாக்கு, அப்படியே பலிப்பதாக, இந்தக் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூறுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

an adventure held in Mariamman Temple festival


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->