அலங்காநல்லூரில் குலுங்கும் காளைகள்!! உலகப்புகழ்பெற்ற ஜல்லிக்கட்டினால் களைகட்டுகிறது தமிழகம்!!  - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முறையே ஜனவரி 15, 16, 17-ந் தேதிகளில் நடைபெறும் அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று பாலமேட்டிலும், அதற்கு முன் தினம் அவனியாபுரத்திலும் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

மதுரை மாவட்ட அலங்காநல்லூரில் இன்று, உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு  நடைபெறுகிறது. இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வினை வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் மற்றும் ஆட்சியர் நடராஜன் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர். 

இதில் 800 மாடுபிடி வீரர்களும், 1400 காளைகளும், பங்கேற்றுள்ளனர். இதில் பங்கேற்ற மாடுபிடி வீரர்கள் விழா துவங்கும் முன்னரே அமைச்சர் உதயகுமார் முன்னிலையில் உறுதிமொழி ஏற்று கொண்டனர். 5 அவசர உதவி ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு, சுமார் 10 மருத்துவர்கள் கொண்ட குழுவினர் ஜல்லிக்கட்டு நடக்கும் இடத்தில இருக்கின்றனர்.

மேலும், மாடுபிடி வீரர்களும், மாடுகளும் மருத்துவப்பரிசோதனை முடிந்த பிறகே தகுதியானவர்களாக களத்தில் இறக்கப்படுகின்றனர். இதில் பங்கேற்கும் வீரர்கள் 55 கிலோவிற்கு குறைவான உடல் எடையில் இருக்க கூடாது, 18 முதல் 40 வயது வரை உள்ள வீரர்களுக்கு மட்டுமே அனுமதி. மேலும், அடிபடாமல் இருக்க களம் முழுவதும் தேங்காய் நார்கள் பரப்பபட்டு உள்ளது.

போலீஸ் பாதுகாப்புடன் அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று கொண்டிருக்கிறது. வீரர்கள் ஏறிதழுவ காளைகள் துள்ளி விளையாடுகினறன. விழாக்கமிட்டியினரின் நகைச்சுவை நிறைந்த பேச்சுக்களுடன் சிறப்பாக நடைபெற்று கொண்டிருக்கிறது.

மேலும், விளையாட்டில் வெற்றி பெறும் வீரர்கள் மற்றும் வெற்றி பெறும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ஆம்னி கார், இருசக்கர வாகனங்கள், குக்கர், வெள்ளி நாணயங்கள், தங்கக் காசு, தங்கச் சங்கிலி, பீரோ, கட்டில், சில்வர் பாத்திரங்கள் என வெற்றியின் தகுதிக்கேற்ப பரிசுகள் வழங்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

alanganallur jallikattu 2019


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->