1300 ஆண்டுகளுக்கு முன்பே, இந்த முறை இருந்துள்ளது! - Seithipunal
Seithipunal


நமது முன்னோர்கள் எழுதிய இலக்கியங்கள் எல்லாம், வெறும் பொழுது போக்கிற்காக எழுதப் பட்டவை அல்ல. அவை ஒவ்வொன்றிலும், ஆயிரம் பொருள் உள்ளன.
    
அந்தக் காலத்தில், நடந்த நாட்டு நடப்புகளைத் தங்கள் நுால்களில், அவர்கள் சுட்டிக் காட்டி உள்ள விதம், பண்டைய காலத்திலும், நம் முன்னோர்கள், தங்களின் வாழ்க்கை முறையை எந்த அளவில் கடை பிடித்தனர், என்பதை அறிய முடிகிறது.
    
அந்த வகையில், கி.பி.7-ஆம் நுாற்றாண்டில், இயற்றப்பட்ட, “ஐந்திணை எழுபது” என்ற நுாலில், அந்த கால கட்டத்தில் நடைபெற்ற ஒவ்வொரு சம்பிரதாயங்களுக்கான காரணங்களை எடுத்துக் கூறி உள்ளது.
    
மூவாதியார் என்பவர், இந்த நுாலிணை இயற்றி உள்ளார். ஐந்து திணை என்பது, பூமியில் உள்ள குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்ற ஐந்து வகையான நிலங்களில் கடைப் பிடிக்கப்பட்ட சம்பிரதாயங்கள் மற்றும் சகுனங்கள் பற்றிக் கூறப்பட்ட செய்திகள் தான்!

    
அதன்படி, அந்தக் காலத்தில், மக்களுக்காக, ஏதோ ஒரு வகையில், தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தவர்களுக்காக, நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது.
 
ஊருக்காக, உயிர்த் தியாகம் செய்தவர்களின் உருவங்கள் பொறிக்கப்பட்ட நடுகல்லை, ஊருக்கு நடுவில், நட்டு வைத்து, அதனை தெய்வமாகப் போற்றி வணங்கினார்கள்.
    
அந்த சம்பிரதாயம், இன்றும், தமிழகத்தில் உள்ள பல கிராமங்களில் தொடர்கிறது. அதே போல், சகுனங்கள் பார்ப்பதும், அந்தக் காலத்தில் பரவலாக இருந்துள்ளது. “பெண்களுக்கு இடது கண் துடிப்பது, ஆலமரத்தில் உள்ள ஆந்தை அலறல் போன்றவை, நல்ல சகுனங்களாக கருதப்பட்டன.
    
மேலும், மருத நிலத்தில் மேயும் மாடுகளின் கழுத்தில், தொண்டுகட்டை என்ற கட்டையைத் தொங்க விட்டனர். இந்த நடைமுறையும் பல கிராமங்களில் இன்றும் தொடர்கிறது.
    
முக்கியமாக, அந்தக் காலத்தில் திருமணம் நடைபெறும் போது, மணமக்களின் பெயர்களையும், அவர்களது உறுதி மொழியையும், திருமண ஒப்பந்தத்தையும் எழுதி வைத்து, அதில், மணமக்களிடம் கையொப்பம் பெறும் வழக்கம் இருந்ததையும், இந்த “ஐந்திணை எழுபது” நுாலில் குறிப்பிடப் பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1300 years ago the marriage contract has existed


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->