ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கும் மூவர் கோயில்..!! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய வரலாற்றில், கட்டிடக் கலையின் அம்சத்திற்கு, மிகச் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது, புதுக்கோட்டை மாவட்டம் கொடும்பாளுரில் உள்ள மூவர் கோயில்.

தெற்கு வடக்காக உள்ள இந்த மூன்று கோயில்களில், வடக்குப் பக்கமிருந்த கோயில் முற்றிலுமாக சிதைந்து விட்டது. தற்போது உள்ள இரண்டு கோயில்களில், கருவறையும், அதன் முன்பாக ஒரு அர்த்த மண்டபமும் காணக் கிடைக்கிறது.

இந்த மூன்று கோயில்களுக்கும் பொதுவாக, ஒரு மகா மண்டபம் இருந்துள்ளது. அந்த மண்டபம் இருந்ததற்கான தடயங்களை மட்டும் தற்போது காண முடிகிறது.

மூன்று கோயில்களைச் சுற்றிலும், பரிவார தேவதைகளுக்காக 15 சிறிய கோயில்கள் கட்டப் பட்டிருந்திருக்கின்றன. அந்த சிறு கோயில்கள் அனைத்தும், தற்போது முற்றிலுமாக அழிந்து விட்டன.

மேலும், இந்த மூன்று கோயில்களைச் சுற்றிலும், பாதுகாப்பு அரண் போல, திருச்சுற்று மதில்கள் இருந்துள்ளன. அவையும் தற்போது முற்றிலுமாக அழிந்து விட்டன.

தற்போதுள்ள இரண்டு கோயில்களில் உள்ள விமானத்தின் உட்பகுதியைப் பார்க்கும் போது, சுற்றிலும் கீழிருந்து மேல் வரை, சுற்றிலும், சதுர வடிவில், கற்களால் அடுக்காக கூம்பு வடிவில், உட் கூடு அமைக்கப் பட்டிருக்கிறது.

உள்ளிருந்து பார்த்தால், ஒரு பிரமிடு போலக் காட்சியளிக்கும், இந்த அமைப்பின் மீது, தான், விமானம் எழுப்பப்பட்டு, ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் நிலைத்து நிற்கிறது.

     


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1000 Years After Stands 3God Temple


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->