பெற்றோர்களைப் பார்க்க ஆசை.. சென்னையில் வீதிவீதியாக தேடி அலையும் வாலிபர்! சிரமத்தில் அவரது நெதர்லாந்து குடும்பத்தினர்!! - Seithipunal
Seithipunal


நெதர்லாந்தை சேர்ந்த ஜூர்ரி டிரென்ட்-வில்மா டி நெய்ட் தம்பதியினர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் சென்னை திருவேற்காடு காப்பகத்திலிருந்து 4 வயது ஆண் குழந்தையை தத்து எடுத்தனர். மேலும் அக்குழந்தையை தங்களுடனேயே நெதர்லாந்துக்கும் அழைத்துச் சென்றனர். அந்த தம்பதிகளுக்கு ஏற்கனவே நீல்ஸ் டிரென்ட் என்ற மகன் உள்ளார்.

இந்நிலையில் கடந்த 20 ஆண்டுகளாக நெதர்லாந்து நாட்டிலேயே வசித்து வந்த லக்ஷ்மணனுக்கு திடீரென தனது பெற்றோரை காண ஆசை எழுந்து தனது வளர்ப்பு பெற்றோர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து பெற்றோர்களை தேடி தனது  வளர்ப்புத் தாய் மற்றும் சகோதரனுடன் கடந்த 5 ம் தேதி சென்னைக்கு வந்தனர்.

 மேலும் சென்னையில் பல பகுதிகளில் லக்ஷ்மன் தனது பெற்றோரை குறித்து விசாரித்து வருகின்றார். இது குறித்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் அவர்கள் மனு அளித்துள்ளனர்

இதுகுறித்து லக்ஷ்மன் கூறுகையில், நான் நெதர்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பணிபுரிந்து வருகிறேன். இருபது ஆண்டுகளுக்கு முன் நெதர்லாந்துக்கு சென்ற எனக்கு தற்போது எனது பெற்றோரை பார்க்க ஆசையாக உள்ளது. மேலும் எனது தாய் பெயர் லோகம்மாள் என்பது மட்டும் நினைவில் உள்ளது.  நான் அவர்களை பார்த்தால் மட்டும் போதும், ஒருவேளை பார்த்து விட்டால் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் உடனே நெதர்லாந்திற்கு திரும்பி செல்வேன். எனது வளர்ப்பு தாயும், சகோதரரும் மிகவும் சிரமப்படுகிறார்கள் என அவர் கூறியுள்ளார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young man searching his parents after 20 years


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->